அருகம்புல்லின் பயன்கள்

 

 

அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கு தீர்வு காண முடியும்.

அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பச்சையாக அரைத்து எடுத்து அதைப் பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும் .இது உடல் அரிப்பு, சொறி,சிரங்கு,படர்தாமரை, வேர்க்குரு போன்றவை சரியாகிவிடும். மேலும் அருகம்புல் அக்கி, கொப்பளங்கள் ,சொரியாசிஸை குணப்படுத்தும்.

கண்நோய்களை தீர்க்க அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி அதை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும் காலையில் அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வடிகட்டிய நீருடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை மாலை குடித்துவர கண் எரிச்சல் அரிப்பு போன்றவை சரியாகும்.

அருகம்புல்லை நீர் விடாமல் அரைத்து அதன் சாற்றை இரண்டு சொட்டு என்ற அளவில் மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து வரும் ரத்தம் குணமாகும்.

வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த அறுகம்புல் சாறு 50 மில்லி லிட்டர் எடுக்கவேண்டும். அதனுடன் புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் சேர்த்து இதை காலை மாலை என குடித்து வர வயிற்று போக்கு சரியாகும்.

அருகம்புல்லை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்க கூடிய மற்றும் உடலில் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடிய மருந்து தயாரிக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories