அருகம்புல் தோல் நோய்களை குணப்படுத்தக் கூடியதாகவும் ,கண் எரிச்சல் வயிற்றுப் போக்கை சரி செய்யக்கூடியதாக உள்ளது.
இந்த அருகம்புல்லில் வயல்வெளிகளிலும் புல்வெளிகளும் வளரக்கூடியது . நரம்பு நாளங்களை தூண்டும் தன்மையையும் உடலுக்கு குளிர்ச்சியையும் தரக்கூடியது.
அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கு தீர்வு காண முடியும்.
கண்நோய்களை தீர்க்க அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி அதை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும் .காலையில் அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
வடிகட்டிய நீருடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை மாலை குடித்துவர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும்.