தினம் ஒரு மூலிகை அவுரி நீலி இதன் இலைகளிலும் காய்களிலும் sennocide மூலப்பொருள் அடங்கியுள்ளது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை விலை நிலங்களில் நெல் அறுவடைக்குப்பின் அவுரி பயிரிட்டு தண்ணீர் வந்ததும் உழும்போது அவரையும் சேர்த்து கூறுவார்கள் அது சிறந்த பசுந்தாள் உரமாகவும் 18 வகை நஞ்சை நீக்கும் குணமுடையது ஆனால் நிலத்தில் இருக்கும் நஞ்சை நீக்கி விடும் அதில் விளையும் உணவை உட்கொண்டு மக்களும் ஆரோக்கியமாக இருந்தனர் இப்பொழுது நெல்லை விட மதிப்பு வாய்ந்த தாவரம் ஆகிவிட்டது இந்தச் செடியிலிருந்து நீலம் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது அவுரி வேர் பட்டை கைப்பிடி எடுத்து பத்து மிளகு சேர்த்து நான்கு டம்ளர் தண்ணீரில் ஒரு டம்ளராக காய்ச்சி தினம் இருவேளை பருகி வர காணாக்கடி ஒவ்வாமை தோல் நோய்கள் ஆகியவை நீங்கும் இதன் இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை கல்லீரல் நோய்கள் தீரும் தினம் ஒரு வேளை 3 நாட்கள் சாப்பிடவேண்டும் இதன் இலையை அரைத்து தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூசிவர குணமாகும் தொடர்ச்சி நாளை நன்றிASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர
