ஆடுகளுக்கு உதவும் மூலிகை மருத்துவம்!

பருவநிலையில் ஏற்படும் மாற்றத்தால் கால்நடைகளைத் தாக்கும் நச்சுயிரி களின் எண்ணிக்கையும் சுற்றுப்புற சூழலில் கொசு மாதிரியான நோய்களைப் பரப்பும் பூச்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இதனால் கால்நடைகளை பலவித நோய்கள் தாக்கி பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றது.

அந்தவகையில் ஆடுகளின் பல நோய்கள் தாக்கலாம் இப்போது இயற்கை வைத்தியம் மூலம் ஆடுகளின் ஆரோக்கியத்தை காக்கும் முறைகள் பற்றி காணலாம்.

நோய்கள் பல காரணங்களால் ஏற்படும். நோய்கள் வருமுன் காப்பது சிறந்தது. ஆனால் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அவ்வப்போது சரி செய்துவிட வேண்டும்.

இயற்கை முறையிலேயே செய்யலாம். இரண்டு அங்குல நீளமுள்ள கற்றாழையை சிறு துண்டுகளாக நறுக்கி ஆடுகளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும்.3 மாதமான ஆட்டு குட்டிகளுக்கு ஒரு அங்குலம் நீளமுள்ள கற்றாழை போதுமானது. இதனை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கொடுத்தால் குடற்புழு தொல்லை இருக்காது.

இதை செய்தால் மட்டும் போதாது. நோய்களில் ஏதாவது தாக்கினாலும் அதை சரி செய்வது அவசியமாகும்.

ஆடுகளுக்கு ஏற்படும் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு இயற்கை தீர்வு உள்ளது. அதை சரி செய்தால் போதும். குறிப்பாக ஆடு களுக்கு ஏற்படும் சளித் தொல்லையைப் போக்க துளசி இலை மற்றும் முருங்கை இலையில் ஒரு கைப்பிடியும் ஆடாதோடா இலை மற்றும் தூதுவளை இலை சேர்த்து ஒரு கைப்பிடி மிளகு சீரகம் மஞ்சள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கலவையுடன் 50 கிராம் நாட்டுச்சக்கரை கலந்து ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் இரண்டு நாட்களுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். இந்த அளவானது ஐந்து ஆடுகளுக்குப் சரியாக இருக்கும்.

ஆடுகளுக்கு ஏற்படும் செரிமான நோய்களுக்கு அகர் மரத்தின் பூவையும் ஏதேனும் வாழைப்பழத்தில் வைத்துக் கொடுக்கலாம். ஜன்னியை குணப்படுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வேப்ப எண்ணெய் தேய்த்து விட வேண்டும். அதன்பிறகு சாம்பிராணி புகை போட்டு வந்தால் சரியாகி விடும்.

பிறகு பேன் ,உண்ணி நீக்குவது மிக அவசியம். அதற்கு 50 கிராம் வசம்பை தண்ணீரில் 8 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் நான்கு கற்பூரவள்ளி இலை மற்றும் தும்பையிலை வேப்ப இலைகளையும் தலா ஒரு கைப்பிடி சேர்த்து அரைத்து ஆடுகளின் மீது பேன் , உன்னில் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். அதன் பிறகு நான்கு மணி நேரம் காயவிட்டு பிறகு நன்றாக தேய்த்துக் கழுவி விட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories