வாரம் இருமுறை குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.
உடல்மேல் வரும் தடிப்பு, பத்து, படை இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும்.
எத்தகைய விஷக்கடியாக இருந்தாலும் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டியும் கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.
சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால், சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமாகி விடும்.
குறிஞ்சாக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயின் தாக்குதல் இருக்காது.
இக்கீரையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி நெறிக்கட்டி இடத்தில் வைத்து கட்டினால் வலி குறையும்.