சித்தரத்தை

சித்தரத்தை அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பான் என்ற பழமொழி உண்டு இதை பற்றி தெரிந்து கொள்வோம் இது பார்க்க இங்கு போன்று இருக்கும் வலிமைமிக்க கப நோயை விரட்டி அடிப்பதில் சித்தரத்தை சிறப்பாக செயல்படும் இதை சாதாரண காலங்களில் உணவாக உட்கொண்டால் நோய்கள் நெருங்கவே வாய்ப்பு இல்லை இதன் மூலம் குழம்பு வைத்து சாப்பிட்டால் உடலில் என்னவெல்லாம் மாயம் செய்கிறது என்பதை அறிந்துகொள்வோம் நாக்கில் புண் பற்கள் சுத்தம் துர்நாற்றம் வயிற்றில் புண் வாய்வு இவற்றிற்கு மூலிகையாக பயன்படுகிறது ஒரு துண்டு சித்தரத்தை நீரில் ஊறவைத்து பல் துலக்கிய பின் இந்த நீரை வாய் கொப்பளிக்க வேண்டும் மூன்று நாட்கள் செய்தால் வாய்துர்நாற்றம் பல் சுத்தம் உதடு வெடிப்பு நீங்கும் நெஞ்சுச்சளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சித்தரத்தை பொடி அரை டீஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் நாள்பட்ட இந்த நோய் நீங்கும் பெரியவர்கள் காய்ச்சல் தொடர் இருமல் தீராத தலைவலி இருந்தால் சித்தரத்தை அதிமதுரம் திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்

 

நன்றிASNசாமி ஆதனூர்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories