ஜாதிக்காய் மருத்துவ பலன்கள் பற்றி தகவல்!

உலகில் வேறெங்குமே காண முடியாத பல மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகள் நம் நாட்டில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு அற்புமான மூலிகை தான் ஜாதிக்காய் . ஜாதிக்காய் பாரம்பரியமாக மருத்துவம் சார்ந்த கைவைத்தியத்துக்கு பயன்படும் பொருள். சித்த மற்றும் ஆயர்வேத மருத்துவ நுல்களிலேயே ஜாதிக்காயின் பயன்பாடு குறித்த குறிப்புகள் இருக்கின்றன. ஜாதிக்காய் உஷ்ணத்தன்மை மிக்க ஒரு மூலிகை என்பதால் இது பெரும்பாலும் பசும்பாலில் கலந்தே மருந்தாக உட்கொள்ளப்படுகின்றன என்றார்

மருத்துவக் குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் தரும் பலன்கள் …
மலேஷியாவில் பினாங்கிலும் , நம் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் உற்பத்தியாகிறது ஜாதிக்காய்ய உலகெங்கும் செல்வாக்கு செலுத்திவரும் ஜாதிக்காய் குறித்து வரலாற்றுச் செய்திகள் ஏராளம். ஜாதிக்காய் முகப்பருவுக்கும் வறண்ட சருமத்துக்கும் எதிரி என்றே சொல்லலாம். இதை சரியான முறையில் பயன்படுத்தினால் அழகு குறிப்புக்கு பலன் கிடைக்கும். ஹார்மோன் பிரச்சனையால் முகப்பருவை சந்திப்பவர்கள் அதை சரிசெய்ய ஜாதிக்காய் பயன்படுத்தினால் போதும். சருமத்துக்கு தீங்கு செய்யும் பாக்டீரியைவை அழிக்க செய்கிறது. சரும பிரச்சனை இருந்தால் ஜாதிக்காயை முதலில் பயன்படித்தி பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும் மற்றும்

சருமத்தை பொலிவுபடுத்தும்
சூரியனின் தாக்கத்தால் சருமம் இழந்த நிறத்தை மீண்டும் பெறுவதற்கு ஜாதிக்காய் உதவுகிறது. சருமத்தில் கரும்புள்ளிகள், சாரும்ம பிரிச்சானை இருப்பவர்கள் ஜாதிக்காயை இப்படி பயன்படுத்துங்கள்.

ஜாதிக்காய் தூள் 1 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் எலுமிச்சைசாறு இரண்டு சொட்டு சேர்த்து, தயிர் கலந்து கெட்டியான பேஸ்ட் பதத்துக்கு குழைத்து முகம் முழுக்க தடவவும்.

10 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமாக துடைத்து மாய்சுரைசர் பயன்படுத்தவும்.

கரும் புள்ளிகள்
முகத்தில் கரும் புள்ளிகள் சிலருக்கு இருக்கும். இதை அப்படியே விடும்போதுதான் அந்த கரும் புள்ளி மேலும் அதிகமாகிறது. இந்த கரும் புள்ளியை கொஞ்சம் கவனமெடுத்து பராமரித்தால் எளிதாக போக்கலாம்.

இதை போக்குவதற்கான முறை என்னவென்றால் இலவங்கப்பட்டை , ஜாதிக்காய் தூள், தேன் மூன்றையும் சம அளவு எடுத்து எலுமிச்சை சாறு சில துளி சேர்த்து நன்றாக கலக்கவும். இரவு தூங்குவதற்கு முன்பு கரும் புள்ளிகள் இருக்கும் இடத்தின் மீது தடவி விடவும். மறுநாள் காலை மிதமான நீரில் கழுவி எடுக்கவும். தொடர்ந்து செய்தால் கரும் புள்ளிகள் மறையக்கூடும் எனவே,

எண்ணைய் சுரப்பும் முகப்பருவும்.
முகத்தில் எண்ணெய் சுரப்பு அதிகமாக இருந்தாலே முகப்பருக்களை அதிகரிக்க கூடும். சருமத்துளைகளும் பெரிதாகும் இந்த சிக்கல் இருப்பவர்கள் ஜாதிக்காயை பயன்படுத்தலாம். இது சருமத்துளைகளையும் அடைக்கும். எண்ணெய்பசையையும் போக்கும். முகப்பருவை துடைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை இவை கொண்டிருக்கிறது.

இதை போக்குவதற்கான முறை என்னவென்றால், ஜாதிக்காய் தூள், தேன் இரண்டையும் சம அளவு கலந்து முகத்தில் பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து விடவும். இவை இரண்டுமே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி பண்புகளை கொண்டிருப்பதால் அது சருமத்தை முகப்பருவிலிருந்து பாதுகாக்க செய்யும். எண்ணெய்ப்பசையை போக்கும்.

ஜாதிக்காயின் பயன்பாட்டுகள் என்னவென்று இங்கு தெரிந்து கொள்வோம்.
தூக்கமின்மை பிரச்சனை
ஜாதிக்காயை நன்கு தூளாக அரைத்து கொண்டு தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பசும்பாலில் அரை தேக்கரண்டி அளவு கலக்கி சாப்பிட்டு வர தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும். நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் கொண்டவர்களுக்கு அது நீங்கும்.

ரத்த சுத்தி
ஜாதிக்காய் சற்று அமிலத்தன்மை மிக்க ஒரு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காயாகும். எனவே இதை அவ்வப்போது பாலில் கலந்து உட்கொள்ள ரத்தத்தில் உள்ள விஷி கழிவுகளை நீக்கி, கெட்ட கொழுப்பு படிவதை தடுத்து ரத்தத்தை சுத்தமாக்குகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூடுகிறது.

வயிற்று பிரச்சனைகள்
நாம் உண்ணும் உணவை நன்றாக செரிமானம் ஆக வயிறு குடல் மற்றும் இதை செரிமான உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு வாயு கோளாறுகள், அஜீரணம், வயிற்றில் அமில சுரப்பு கோளாறுகள் போன்றவற்றால் அவதியுறுகின்றனர். இவர்கள் ஜாதிக்காய் தூளை சிறிது பால் அல்லது பால் கலக்காத தேநீருடன் அருந்தி வர இப்பிரச்சினைகள் நீங்கும். குடல்களில் பூச்சி தொல்லைகளால் அவதியுறும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதே முறையில் உட்கொள்ள குடல்புழுக்கள் நீங்க பெறுவார்கள்.

ஆண்மை பெருக்கி
இன்றைய காலத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு மனஅழுத்தம் அதிகமிருக்கிறது. இது அவர்களின் இனப்பெருக்க நரம்பு மண்டலங்களை பாதித்து ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையிலுள்ள ஆண்கள் தினமும் இரவு உறங்கும் முன்பு பாதாம் பருப்பை அரைத்து, பசும்பாலில் கலக்கி அதனுடன் சிறிது ஜாதிக்காய் தூளை சேர்த்து ஒரு மண்டலம் அல்லது 48 நாட்கள் அருந்த நரம்புகள் வலுப்பெற்று ஆண்மைக்குறைவு மற்றும் மலட்டுத்தன்மை நீங்கும்.

மொத்ததில் ஜாதிக்காய் நல்லன பலவற்றைச் சாதிக்கும் காய்யாகும் என்றார்.

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories