தலைவலியா? இதோ எட்டு பாட்டி வைத்திய குறிப்புகள்……

தலைவலி எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது. இருப்பினும் குறைவான சர்க்கரை அளவு,ஒவ்வாமை,சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது,சத்துக் குறைபாடு,அதிகப்படியான வேலை,சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை,அதிகப்படியான குடிப்பழக்கம்,புகைப்பழக்கம் காரணமாகவும் தலைவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தலைவலிக்கு பாட்டி வைத்தியம்:

*கொதிக்கும் தண்ணீரில் காப்பிக்கு கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.

*வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும்.தலைவலி தீரும்.

*கிராம்பு சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

*கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

*2 மிளகை எடுத்து அதை சிறிது தேங்காய் எண்ணையை விட்டு நன்கு அரைத்து நெற்றியில் தடவி பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

*கடுகுத்தூள், அரிசி மாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீரில் கலந்து களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

*புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும் .

*டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories