நமக்கு நாமே வைத்தியம் பகுதி 6 அம்மான் பச்சரிசி மூலிகை

நமக்கு நாமே வைத்தியம் பகுதி 6
அம்மான் பச்சரிசி மூலிகை
அம்மான் என்ற வார்த்தையே தாய்வழி உறவினர்கள் என்ற அர்த்தம் உண்டு இந்த மூலிகை தாய் போல் நமக்கு பயன் படும் என்பதால் அம்மான் என்ற அடைமொழி உண்டு
பச்சரிசி தான் முன்பு நமது உணவு முறை காலப்போக்கில் பச்சரிசியில் இளம் இனிப்பு சுவை உண்டு (எனவே சக்கரை குறைபாடு சரி செய்ய ஒரு முறை வேகவைத்த நெல்லில் இருந்து கிடைக்கும் புழுங்கல் அரிசி சாதம் நல்லது என்று அலோபதி மருத்துவம் பரிந்துரை காரணமாக பலர் பச்சரிசியை தவிர்க்க தொடங்கி விட்டனர் ஆனால் இதில் ஒரு வேடிக்கை பச்சரிசியை பயன் படுத்தி செய்யும் அசைவ பிரியாணியை யாரும் உணவை தவிர்ப்பது இல்லை) உடலுக்கு நல்லது செய்யும் என்பதால் அம்மான் பச்சரிசி என்றும் இதில் இலை காம்புகளை கிள்ளினால் பால் வழியும் அதனால் சித்திரபாலாடை என்றும் பெயருண்டு.
அம்மான் பச்சரிசி அபரிமிதமான பலன்களை வாரி வழங்கும் மூலிகை !
மழைக்காலத்தில் தெருவெங்கும் வளரும் மூலிகை உலகமெங்கும் வளரும் செடி வகை தாவரம்!
இதன் இலைகளை பச்சையாக மென்று சாப்பிட முடியும். இலையின் நிறங்களை கொண்டு இருவகை உண்டு பச்சை சிகப்பு என்று இதில் சிகப்பு செடி கூடுதல் கவனம் பெற்றது.
வாய் புண் குடல் புண்களை மிகவும் வேகமாக ஆற்றி விடும் செடியை வேரோடு சமூகமாக பறித்து நன்றாக கழுவி விட்டு அரைத்து வடிகட்டி மோரில் கலந்து குடித்தால் வயிற்று புண் மறையும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இப்படி ஒரு அரை நெல்லிக்காய் அளவு அரைத்து வடிகட்டி உணவில் சேர்த்துக் கொண்டால் தாய் பால் அதிகமாக சுரக்கும்!
அம்மான் பச்சரிசி மூலிகை செடியில் இருந்து வரும் பாலை உடலில் வரும் மரு மீது ஒரு பத்து நாட்கள் தொடர்ந்து இருவேளை வைத்தால் மரு உதிர்ந்து விடும்!
அம்மான் பச்சரிசி நிறைய பலன்களை வாரி வழங்கும் இலைகளை கூட்டு செய்து சாப்பிடலாம்!
மிகவும் முக்கியமான விஷயம் இதன் காய்களை பார்த்தால் கொத்தாக இருக்கும் ! நமது சித்த வைத்திய குறிப்புகளில் எந்த இலை காய் பூ மனித உடல் உறுப்புகளோடு சம்பந்தப்பட்ட உருவ அமைப்பில் இருக்கிறதோ அவை அந்த உறுப்பில் வரும் வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது அம்மான் பச்சரிசி காய்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது புற்று செல்களை உருவானவர்களுக்கு இதன் மூலிகைகளில் உருவான மருந்து தான் முக்கியமானது!
இதன் பால் மரு என்ற சிறு செல்களை அழிக்கும் இதன் சமூலம் உடலில் உள்ள தேவையற்ற செல்கள் இணைந்து தான் புற்றுநோய் செல்களை வளர்க்கும் அதன் ஆணிவேரை அடியோடு அழிந்து விடும் இதன் வேர் முதல் இலை வரை வேரோடு சமூகமாக பறித்து நன்றாக கழுவி அரைத்து வடிகட்டி மோரில் அல்லது வெள்ளை ஆட்டு பாலில் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை உடனடியாக குறைக்கும் இப்படி பச்சையாக உணவில் சேர்த்துக் கொள்ளும் போது புளிப்பு உப்பு இல்லாத பால் தயிர் இனிப்பு சுவை என்று எடுத்துக் கொண்டால் உடல் வெகு விரைவில் மூலிகை சாற்றை கிரகித்துக் கொள்ளும்! புளிப்பு சுவை மூலிகைகளின் பலனை குறைந்து விடும் அதனால் உப்பு புளி தவிர்க்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்!
தேடி போகும் மூலிகை காலில் வந்து சிக்கினால் கூட மூலிகை வைத்தியம் பற்றி அவநம்பிக்கை தமிழர்களிடம் குறைந்து விட்டது 💃

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories