நொச்சி இலையின் மருத்துவ பயன்கள் பற்றி குறிப்புகள்!

நொச்சி தாவரத்தில் இலைகள் மிகவும் அவசியமானவை. இதில் கருநொச்சி, நீலநொச்சி வெண்ணொச்சி என்று பல வகைகள் உள்ளன மற்றும்

கீல் வாதம், முக வாதம் போன்ற கடுமையான வாத நோய்கள் மண்டைக் குடைச்சல் ஆகியவற்றிற்குச் செய்யப்பபடும் மருந்துகளில் கருநொச்சி சிறப்பாக கருதப்படுகிறது எனவே

கால் வீக்கத்தை குறைக்க கரு நொச்சி இலைகளை அரைத்து பற்றுப் போடும் முறை தற்போதும் கிராமங்களில் செய்யப்படுகிறது. இயற்கை மருத்துவத்தில் நொச்சி அதிகளவில் சேர்க்கப்படுகிறது. மூட்டுவலியை, உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க, சருமப் பிரச்சனைகளுக்கு நொச்சி பயன்பாடு நிவாரணியாக வேலை செய்கிறது.

குடலில் ஏற்படும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கும் திறன் கொண்டது நொச்சி இலை, மாதவிடாய், கர்ப்பகாலப் பிரச்சனைகள், சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கும் நிவாரணம் வழங்குகிறது இதில்

நொச்சிச் செடி இருக்கும் இடங்களில் நோய்களைப் பரப்பும் கொசுக்களும் பூச்சிகளும் இருக்காது. நொச்சி துவர்ப்பு சுவை கொண்டது. வெப்பத் தன்மையுடையதாக இருந்தாலும், அசதியைத் தணிக்கும், சிறுநீரைப் பெருக்கும், காய்ச்சலைப் போக்கும், ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும் எனவே

ஒரு தேக்கரண்டி நொச்சி இலை சாற்றில் 1 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு, நெய் சேர்த்து, காலை மாலை வேளைகளில் சாப்பிட்டுவந்தால் மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும் எனவே

ஒரு பிடி நொச்சி இலைகளை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து நீராவி பிடித்தால், தலை பாரம் குறைந்து விடும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories