துவர்ப்பு சுவை அதிகம் கொண்டுள்ள பாக்கியில் டேனின் என்ற மூலப்பொருள் உள்ளது மேலும் ப்ரோசைனிடின் என்ற வேதிப்பொருளும் உள்ளது. இவை தனித்து அயனிகளை அழிக்கும் செயல் புரிகிறது குறிப்பாக ஞாபகமறதி மற்றும் அழற்சியை ஏற்படுத்தும் மூளை நரம்பு சிதைவு காரணிகளை சிதைத்து உரிய பாதுகாப்பு அளிக்கிறது.
மூலப்பொருள்கள் வயதாகும் நிலையில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்க அழகு சாதன பொருட்களில் பயன்படுகிறது.
குருத்து இலையை இடித்து சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் இடுப்பில் தடவி வர இடுப்பு வலி நீங்கும்.
குடற்பகுதியில் மிகுந்த கொலஸ்ட்ரால் குளுக்கோஸ் உறிஞ்சுதல் வெகுவாக தடுக்கிறது.