பெருங்காயத்தில் இருக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம்!

இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடத்தை பிடித்து இருக்கிறது. பெருங்காயத்தின் மணம், உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவை அளிக்கிறது. பெருங்காயம் தாளிக்கும் போதும், ஊறுகாய் தயாரிக்கும்போதும் பயன்படுத்தப்படுகின்றன. பெருங்காயம் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது உணவுக்குழாய் தடுப்பானாகவும், உணர்ச்சியைக் அதிகரிக்கும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், நரம்பு உந்தியாகவும், மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. இப்போது பெருங்காயத்தால் ஏற்படும் சில நன்மைகளை தெரிந்துகொள்ளும்.

ஜீரணத்துக்கு உதவும்
பெருங்காயமானது செரிமானமின்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயம் தினசரியில் சமைக்கும் உணவில் சேர்க்கப்படுகிறது.பெருங்காயம் செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, எரிச்சல் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவகிறது. சிறிய அளவு பெருங்காயத்தை அரை டம் ளர் தண்ணீரில் கரைத்து குடித்தால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் காணலாம் மற்றும்

பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளில் வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் சூதகவாய்வுகளில் இருந்து விடு பட உதவிக் கிடைக்கும். பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்களுக்கும்,பெருங்காயம் சிறந்த மருந்தாக இருக்கிறது இதில்

பெருங்காயம் ஆண்களின் ஆண்மை குறைவையம் குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஆண்மையை தூண்டும் மருந்தாகவும் விளங்குகிறது.சுவாச குழாய் புண்களுக்கு பழமையான மருந்து பெருங்காயம். இது ஒரு சுவாச உந்தியாக, சளி நீக்கியாகவும், நெஞ்சு அடைத்தல் நிவாரணியாகவும் செயல்படுகிறது. பெருங்காயத்தை இஞ்சியுடன் தேனை கலந்து குடித்தால் வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்ற பிரச்சனைகள் தீரும்

பெருங்காயம் நரம்பு உந்தியாகவும் செயல்படும். எனவே இதை நரம்பு தளர்ச்சி , தசை வலிப்பு, மயக்கம் மற்றும் நரம்பு சீர்குலைவுகளுக்கு பயன்படுத்தலாம்.

சந்தையில் கிடைக்கும் பல சரும பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயமும் சேர்க்கப்பட்டுள்ளது,பெருங்காயத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக விளங்குகிறது. இதை சருமத்தில் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories