மூலிகை இலைகளால் முக கவசம்: மலைவாசிகளின் வித்தியாசமான முயற்சி!

கொரோனாக் காலத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள்,மூலிகை இலையினால் ஆன முகக்கவசத்தைப் பயன்படுத்துகின்றனர்.

கொரோனாக் கோரத்தாண்டவம் (Corona claim)
உலக நாடுகளை உலுக்கியது மட்டுமல்லாமல், இந்தியாவிலும் தமது 2-வது அலையை விஸ்தரிக்கவிட்டுக் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது கொரோனா.

ஊரடங்கு (Curfew)
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏதுவாக இரவு நேர ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டது எனவே

முகக்கவசம் கட்டாயம் (The mask is mandatory)
அதேநேரத்தில் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அனைவரும் முகக்கவசம் அணிவதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது இதில்

அலட்சியம் (Indifference)
இருப்பினும், நம்முள் சிலர் பின் விளைவுகளைச் சிந்திக்காமல், முகக்கவசம் அணிவதைச் சுமையாகக் கருதுவதால், அலட்சியமாக முகக்கவசம் அணியாமல் திரிகின்றனர்.

பழங்குடியினரின் பக்குவம் (Maturity of the tribe)
ஆனால், காட்டுக்குள் இயற்கையோடு ஒன்றி வாழும் பழங்குடியினரோ, மூலிகை இலையை முக கவசமாக அணிந்து வலம் வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு வடகரைபாறை மக்களிடம்தான் இந்த புது வழக்கம் உள்ளது.

கொரோனா இல்லை (No corona)
இங்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றபோதிலும், முக கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பழங்குடியின மக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளனர். இருப்பினும் முகக்கவசம் சற்று ஆரோக்கியம் நிறைந்ததாகவும், செலவில்லாததாகவும் இருக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் சிந்தித்தனர். இதன் அடிப்படையில், மூலிலை இலை முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்றும்

ஜலதோஷத்திற்கு மருந்து (Remedy for colds)
வனப்பகுதியில் உள்ள பிசிலாம் மரத்தின் இலை, கிருமிகளை நம்மிடம் அண்ட விடாது என முன்னோர்களின் அறிவுரை. குறிப்பாகக் குழந்தைகளின் ஜலதோஷ பிரச்னைக்கு, இந்த இலை மற்றும் வெங்காயத்தை மாலையாக கோர்த்து அணிவது வழக்கம். இதன் மூலம் ஜலதோஷம் விரைவில் நீங்கிவிடுகிறது மற்றும்

நுரையீரல் (Lung)
இதை அணிவதால், இந்த இலையின் மணம் நுரையீரல், சுவாசப் பாதைகளை துாய்மையாகப் பராமரிக்கும் என்பதால், வெளியில் செல்லும்போது இதை முக கவசமாக அணிகிறார்கள்

இவ்வாறு, பழங்குடியின மக்கள் கூறுகின்றனர். இந்த முறையை மற்றவர்களும் பயன்படுத்தினால், காசு செலவும் ஆகாது, ஆரோக்கியமும் உறுதி செய்யப்படும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories