மூலிகை சொல்லும் ரகசியம் : நரம்புக்கும், மூளைக்கும் வலு சேர்க்கும் சிறந்த மூலிகை!

மருத்துவ குணங்களை கொண்ட மூலிகைகளில் நீர்பிரம்மியும் ஒன்று. பெரும்பாலும் இது குறித்து அறிந்திருக்க மாட்டீர்கள். சித்த மருத்துவத்தில் அதி முக்கியத்துவம் இந்த நீர்பிரம்மிக்கு உண்டு. மூலிகைகள் என்றாலே கசப்பு சுவைதான் என்று நினைப்பவர்கள் இந்த நீர்பிரம்மி மூலிகை குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இது பிரம்மி, விமலம், பிரமிய வழுக்கை, பூடு, வாக்குபலம் என்று அழைக்கப்படுகிறது. நீர்பிரம்மி பெயருக்கேற்றபடி உடலில் தலையின் செயல்பாடுகளை சீர்படுத்துகிறது. பிரம்மம் என்றால் தலைமையானது என்று சொல்வார்கள். நீர்பிரம்மி செடி முழுவதுமாக பச்சையாக இருக்கும். இதன் இலை உருண்டையாக இருக்கும். இதன் பூ வெள்ளையாக இருக்கும். இனிப்பு சுவை கொண்ட இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

நினைவுத்திறனை அதிகப்படுத்தும்
நீர் பிரம்மியும் நினைவுத்திறனை அதிகரிக்க செய்யும் வல்லமை கொண்டவை. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை காலை வேளையில் நீர்பிரம்மி இலை ஒன்றை சாப்பிட கொடுத்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும். இல்லையெனில் இந்த இலையை துவையலாக்கியும் சாப்பிட்டு வரலாம். நீர்பிரம்மி அமைலாய்ட் திட்டுகள் மூளையில் தேங்குவதை தடுத்து அல்சைமர் நோய் தாக்கத்தை தடுக்கவோ அல்லது தள்ளிப்போடவோ செய்கிறது.

நரம்புத்தளர்ச்சியை நீக்கும்
நரம்புத்தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் உணவில் கவனம் செலுத்தினால் பிரச்சனையின் தீவிரம் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். இது உடலில் நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கும் குணம் கொண்டது. நரம்பு இழைகளோடு மூளைப்புறணி கூர்மையாக செயல்படுவதற்கு நீர்பிரம்மி தூண்டுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது மனப்பதற்றத்தை குறைத்து மன அழுத்தத்தை குறைக்க செய்யும் என்றார்.

மதுவை மறக்கடிக்கும்
குடிப்பழக்கத்தை கொண்டிருப்பவர்கள் அதை மறக்க செய்ய ஏதுவாக நீர்பிரம்மியை மூலமாக வைத்து வேறு சில பொருள்களும் சேர்த்து நீராக காய்ச்சி கொடுக்கப்படுகிறது. இது குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை மீட்க செய்கிறது. நீர்பிரம்மி புற்று செல்களின் பெருக்கத்தை தடுப்பதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செரிமானக்கோளாறுகள் இருப்பவர்கள் இஞ்சியை அவ்வபோது உணவில் சேர்த்து வருவதுண்டு. இவர்கள் இஞ்சியோடு நீர்பிரம்மி இலையையும் கலந்து கஷாயமாக்கி குடிக்கலாம். வயிற்றுப்புண், குடல் புண், வாய்ப்புண் கொண்டிருப்பவர்கள் மணத்தக்காளியை எடுத்துகொள்வது உண்டு. அவர்கள் மணத்தக்காளியுடன் இந்த நீர்பிரம்மி இலையையும் சேர்த்து எடுத்துகொண்டால் புண் வேகமாக குணமாகும் என்றார்.

தொண்டை கரகரப்பு நீங்கும்
நீரி பிரம்மி இலையை எடுத்து சுத்தம் செய்து அதை மைய அரைத்து சாறாக்கி குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். பெண்கள் தங்களது தொண்டை மென்மையாக இருக்க விரும்பினால் நீர்பிரம்மி இலையின் சாறை குடிக்கலாம். சரியான உச்சரிப்பு வராதவர்கள், பேச்சில் தடுமாற்றம் கொண்டிருப்பவர்களுக்கு சித்த மருத்துவம் சொல்லும் மருந்தில் நீர்பிரம்மியும் உண்டு.

மூட்டுகளில் வீக்கம்
உடலில் குறீப்பாக தசைகள் மூட்டுகளில் வீக்கம் உண்டாகும். அப்போது வீக்கத்தோடு வலியும் அதிகரிக்கும். வீக்கத்தை குணப்படுத்த நீர்பிரம்மி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி இளஞ்சூட்டோடு அந்த இடத்தில் வைத்து துணியால் கட்டி விடவும். தினமும் இதை செய்து வந்தால் வீக்கமும் அதனோடு வலியும் குறையும். மூளையின் செயல்திறன் குறைந்தவர்களும், நரம்பு சம்பந்தமான பிரச்சனை கொண்டவர்களுக்கும் நீர்பிரம்மி இயற்கை தந்த அருமருந்தாகும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories