மேய்ச்சல் தரையில் ஆடுகள் வளர்க்கும் போது ஆடுகள் நனையாமல் இருப்பதற்கும் ஓய்வு எடுப்பதற்கு ஓலை கீற்றுக் கொட்டகை அமைத்து பராமரிக்க வேண்டும். ஆடு ஒன்றுக்கு 6 சதுர அடி என்ற அளவில் இடம் விட வேண்டும்.
நீச்சல் தரையை விட்டு ஆ டுகள் வெளியில் செல்வதை தடுக்க உயிர் வேலிகள் அமைக்கப் பட வேண்டும். மேய்ச்சல் தரையில் ஆடுகள் கொடுக்க வசதியாக தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும். இதுபோன்ற மேய்ச்சல் தரை பண்ணை கொட்டகை வளர்ப்பில் ஒரு ஏக்கருக்கு நிலத்தில் 20 முதல் 22 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
நோய்கள்
ஆடுகளைப் பொருத்தவரை வேங்கைநோய் துள்ளுமாரி நோய் உள்ளிட்ட சில நோய்கள் ஏற்படுவது உண்டு. இவற்றை தடுக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசிகள் அளிக்க வேண்டும். மேலும் ஆடுகளில் குடற்புழு வளர்ச்சி பாதிக்கப்படும்.
இதனை தடுக்க குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்பட்ட அடுத்த 20 நாளில் மீண்டும் குடற்புழு நீக்க மருந்து கொடுத்தால் குடற்புழு முட்டைகள் முற்றிலும் அழிந்துவிடும். இதனால் ஆடுகளின் எடை கணிசமாக கூடும் .சினை ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யக்கூடாது.