உழவு ஏன் அவசியம்?

 

உழவு ஏன் அவசியம்? (Why is plowing necessary?)
பருவமழையை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் விவசாயத்தில் விளைநிலத்தை உழவு செய்வது முக்கிய பங்கு வகிக்கிறது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் கோடை உழவு காரணமாகப் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கிடைக்கிறது என வேளாண்துறை தெரிவிக்கிறது.

மண்ணைப் பாதுகாக்க (To protect the soil)
அதேபோல் மழைக்காலத்தில் மேற்கொள்ளப்படும் உழவு, விளைநிலத்தில் மழை நீரை உள்வாங்கி மண் வளத்தை பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

பாரம்பரிய முறை (Traditional method)
இந்தநிலையில் உழவு செய்ய டிராக்டர் உள்ளிட்ட எந்திரங்கள் பயன்பாடு அதிகரித்தாலும், காளைகளைப் பயன்படுத்தி ஏர் உழவு செய்யும் பாரம்பரிய முறையை இன்றளவும் உடுமலை பகுதி விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.

ஏர் உழவு (Air plowing)
முன்பு ஆடிப்பட்டம் உள்ளிட்ட அனைத்து பட்டங்களிலும் சோளம், நிலக்கடலை, கொண்டைக்கடலை உள்ளிட்ட மானாவாரி சாகுபடி விதைப்புக்கு ஏர் உழவு முறையே பின்பற்றப்பட்டு வந்தது.

காணாமால் போனது (Disappeared)
உழவுக்குத் தேவையானக் காளைகளைப் பராமரிப்பதில் அதிகரிக்கும் செலவினங்கள், தகுந்த பயிற்சி பெற வேண்டியது அவசியம், அவ்வாறு முறையாக பயிற்சி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவு, எந்திரங்கள் வருகை உள்ளிட்ட பல காரணங்களால் ஏர் உழவு முறை படிப்படியாக குறைந்துக் காணாமல் போனது.

இருப்பினும் சிலர் தற்போதும் ஏர் கலப்பையால் விளைநிலத்தை உழுது ஆடிப்பட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,

ஆழமான உழவு (Deep plowing)
ஏர் கலப்பையால் உழவு செய்யும் போது அதிக ஆழத்துக்கு உழவு செய்ய முடியும்.

பலன்கள் (Benefits)
இதனால் மழைக்காலத்தில் கூடுதலாக மழை நீர் விளைநிலத்தில் தேங்குவது உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கிடைக்கிறது.

நடைமுறை சிக்கல்களால் தற்போது சீசன் சமயங்களில் எந்திர உழவு முறையே கைகொடுக்கிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories