விவசாயத்திற்கு மிக முக்கியமான முதல் வேலை என்றால் அது உழ வு தான். அத்தகைய விவசாயத்தில் சிறப்புமிக்க உழவின் முக்கியத்துவம் பற்றி இங்கு காணலாம்.
மணி மற்றும் முனீஷ் 3 இருவரும் ஒரே வகுப்பு படித்தவர்கள். அவர்கள் பள்ளியில் வேளாண்மை படத்திலிருந்து உழ வு பற்றி கட்டுரை எழுதி வரச் சொன்னார்கள். இதற்கு அவர்கள் வீட்டில் அருகிலுள்ள ஒரு தாத்தாவைப் பார்த்து தான் முழு தகவலையும் பெற முடியும் என இருவரும் நினைத்தார்கள். அதனால் தாத்தாவை சந்தித்தனர்.
அவர்களை கண்ட தாத்தா மணி மற்றும் மோனிஷ் இருவரும் ஒன்றாக வந்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் தாங்கள் வந்ததற்கான காரணத்தை கூறினார்கள் .உடனே தாத்தா உழ வு பற்றி தானே தாராளமாக சொல்லிக் கொடுக்கிறேன் என்று கூறினார்.
விவசாயத்தில் உழவு தான் மிக முக்கியமான செயல் .அந்த காலங்களில் உழ வுகளை கால்நடைகளை கொண்டு செல்வார்கள் ஆனால் தற்போது எல்லாவற்றிற்கும் இயந்திரம் வந்துவிட்டது.
உழவு செய்தால் தான் நிலம் வளமாகும் என்று சொல்லியவாறு “ உழ வு இல்லாத நிலம் உருப்படி ஆகாது”
என்ற பழமொழியை கூறினார். இதைக் கேட்ட இருவரும் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
உடனே தாத்தா விவசாயத்திற்கு வளமையை உழ வுதான் உழ வு இல்லாவிட்டாலும் பயிர்களுக்கு இடப்படும்
உரம் பயிருக்கு சென்றடையாமல் கலைகளுக்கு தான் சென்றடையும். இதனால் கலைகள்தான் அதிகம் வளரும் என்று கூறினார்.
அதை உணர்த்தும் வகையில்தான் “ உழ வு இல்லாத நிலம் உருப்படி ஆகாது”
என்ற பழமொழி கூறப்படுகிறது அதாவது விவசாயத்தின் முக்கிய பணியான இந்த உழ வு இல்லை என்றால் எந்த பலனும் கிடைக்காது. நிலத்திற்கு எவ்வளவு உரம் போட்டாலும் நன்கு உழவு செய்ய வில்லை என்றால் அந்த நிலத்தில் விளைச்சல் நன்றாக இருக்காது என்று தாத்தா கூறினார்.
எப்படி உழவு செய்வது என்று கேட்டான் மணி
உழவு செய்வதால் அநேக நன்மைகள் நிலத்திற்கு உள்ளது .உழ வு என்பது கருவிகளையும் இயந்திரங்களையும் கொண்டு மண்ணெய் விதை முளைப்பதற்கும், பயிர் விளைச்சலுக்கும் ஏற்றபடி பக்குவப்படுத்தி ஆயத்தப்படுத்துவது ஆகும். இதில் கலைகள் போன்றவை இருப்பின் உள் மூடப்பட்டு மட்க வைக்கப்படுகிறது இதனால் நிலம் வளமாகும் என்றார்..
உழவை ஏன் செய்யவேண்டும் என்றாலன், அதற்கு தாத்தா நிலத்தில் சிறந்த விதைப்புக்கும்,முளைப்புக்கும் ஏற்றவாறு மண்ணை பயன்படுத்தவும், பயிர் விளைச்சலுக்கும் கலை கட்டுப்படுத்தவும் மழை நீரை நிலத்தில் சேர்க்கவும் மண்ணில் இடப்படும் எரு மற்றும் சத்துக்களை மண்ணுடன் நன்கு கலக்கவும் கட்டாயம் நிலத்தை உழவு செய்யவேண்டும் என்றார்..