# காலிஃபிளவர் சாகுபடி தொழில் நுட்பம்

# காலிஃபிளவர் சாகுபடி தொழில் நுட்பம்
ரகம் : டிராப்பிக்-3, டபுள்கிராஸ் மற்றும் வீரிய ரகங்கள்
பட்டம் : வைகாசி, ஆணி, தை
விதையளவு
சாதா ரகம் ஒரு ஏக்கருக்கு 100 கிராம்
ஒட்டு விதையாக இருந்தால் 60 கிராம் / ஏக்கர்
நிலம் பராமரிப்பு
3-4 முறை நன்றாக உழுது மண்ணில் உள்ள கற்களை பொருக்கி அப்புறப்படுத்த வேண்டும்.
தொழுவுரம்
ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம்
அடியுரம்
அமோனியம் சல்பேட் 45 கிலோ,
சூப்பர் பாஸ்பேட் 200 கிலோ
பொட்டாஷ் 40 கிலோ போட வேண்டும்.
பாத்தி அமைக்கும் முறை
ஒரு மீட்டர் அகலமுள்ள தேவையான நீளமுள்ள பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைக்கும் முறை
ஆறிய தொழுஎரு 100 கிலோ. 400 கிராம் அசோஸ்பைரில்லம், 400 கிராம் பாஸ்போபாக்டீரியா, 500 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றை நன்றாக கலந்து ஒரு ஏக்கருக்கு தேவையான பாத்திகளில் இட்டு, 10 செ.மீ நேர் கோட்டில் விதைகளை விதைத்து, மண்ணால் மூடி காய்ந்த புல்லைக்கொண்டு மெல்லிய போர்வை அமைத்து, பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும்.
மருந்து தெளிக்கும் முறை
நாற்றங்காளில் விதைத்த 15ம் நாள் மோனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1½ மில்லி என்ற அளவில் கலந்து நாற்றங்காளில் தெளிக்க வேண்டும்.
நாற்றுகளின் வயது 20- 25 நாள் வயதுடைய நாற்நுறுக்களை எடுத்து நடவு செய்ய வேண்டும்.
இடைவெளி
பார்ருக்கு பார் 2அடி
செடிக்கு செடி ஒருஅடி
வேர் அழுகல் தாக்குதலின் அறிகுறி
செடி பழுத்து இளமஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடும்
கட்டுப்படுத்தும் முறை
நாற்றுக்கள் நடும்போது போரெட் அல்லது கார்போபியூரடான்
குருணை மருந்தை (6 கிலோ 1 ஏக்கர்) மண்ணில் இட வேண்டும்.
இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை
டிரைக்கோடெர்மா விரிடி 3 கிலோவை ஆறிய எரு 50
கிலோவில் கலந்து வயலில் ஈரம் இருக்கும்பொழுது
தூவி விட வேண்டும்.
களை நிர்வாகம்
15ம் நாள் முதல் களை, 22ம் நாள் இரண்டாவது களை, எ டுக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
ஒரே சமயத்தில் அதிக அளவு நீர் பாய்ச்சாமல் சிறிய அளவில் அடிக்கடி நீர் பாய்ச்சுவதன் மூலம் பூக்கட்டிகள் நன்கு வளர்ச்சியடையும்.
நுண்ணூட்டம்
இலைகள் சிறுத்துக் வெறும் தண்டுடன் காணப்படும் இதனைச் சரி செய்ய ஏக்கருக்கு மாலிப்டினம் என்ற நுண்ணூட்டத்தை ஒரு கிலோ என்ற அளவில் மண்ணில் இட வேண்டும்.
மேலுரம்
30 -35 வது நாட்களில் 45 கிலோ அமோனியம் சல்பேட் இடவேண்டும்.
அறிபுழு, கரும்புழு தாக்குதலின் அறிகுறி
இலையின் தளிர்களை சுரண்டிச் சாப்பிட்டுவிடும் இலை சல்லடைபோல் காணப்படும்
இயற்கைமுறையில் கட்டுப்படுத்தும் முறை
பாதிப் பூ வெட்டிய பிறகுதான் இந்த அறிபுழு விழும்,
இவற்றை கொக்குகள் வந்து வயலிலேயே சாப்பிட்டுவிடும்,
இரசாயான முறையில் கட்டுப்படுத்தும் முறை
டைக்குளோராவாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி, குளோரி பைரிபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி இவற்றுடன் ஒட்டுபசை சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
கண்ணாடி இறக்கைப்பூச்சி, பட்டுப்பூச்சி தாக்குதலின் அறிகுறி செடியின் அருகில் சென்றால் சிறுசிறு பூச்சிகளாக பறக்கும்
கட்டுப்படுத்தும் முறை
மாலை 6 மணியிலிருந்து 9 மணிக்குள் ஒரு ஏக்கருக்கு 2 இடத்தில் விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்
செல் (அசுவிணி) தாக்குதலின் அறிகுறி
இலையின் அடிப்பகுதியில் இலையின் சாற்றை உறிஞ்சுவதால் செடி பச்சையம் இழந்து காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை
ஸ்டார்த்தீன் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.½ கிராம் அடித்துக் கட்டுப்படுத்தலாம் (குறிப்பு) மஞ்சள் செல் இருந்தால் புழு உற்பத்தி கிடையாது
புரோடடீனியாபுழு தாக்குதலின் அறிகுறி
இலையின் பின் பகுதியில் தாய் பூச்சி முட்டையிட்டு
புழுக்கள் கூட்டமாக இருந்துகொண்டு செடிகளை
சாப்பிட ஆரம்பிக்கும்
கட்டுப்படுத்தும் முறை
விளக்குப்பொறி வைத்துக் கட்டுப்படுத்தலாம்
ஒட்டுண்ணி அட்டை வைத்து கட்டுப்படுத்தலாம்
குயினால்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி,
டைக்குளோராவாஸ் 2 மில்லி என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்
கூட்டுப்புழு தாக்குதலின் அறிகுறி
பூவின் உட்பகுதியில் பூக் கிளைகளுக்குள் கூடுகட்டி பூக்களை சேதப்படுத்தும்
கட்டுப்படுத்தும் முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு டைக்குளோராவாஸ் 2 மில்லி, குளோரிபைரிபாஸ் 4 மில்லிஇரண்டையும் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
நூற்புழு தாக்குதலின் அறிகுறி
இவை நம் கண்ணுக்கு தெரியாது செடியின் வேரில் இருக்கும
கட்டுப்படுத்தும் முறை
செடி நட்ட 15ம் நாள் பியூரடான் குருணை மருந்து ஒரு ஏக்கருக்கு 5 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 20 கலந்து காட்டில் தூவி விட வேண்டும்
வெடி பூ தாக்குதலின் அறிகுறி
பூ மலரும் போது சீராக இல்லாமல் மற்ற பூக்களை விட முன்னும் பின்னும் அதிகம் வளர்ந்து இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
பூ முதிர்ச்சி அடைவதைற்கு முன் மொட்டாகவும், வெண்மை கலந்த மஞ்சள் கலராக இருக்கும் போது பூ பரித்துவிட வேண்டும்
பூஅழுகல் தாக்குதலின் அறிகுறி
பூக்கள் கருமஞ்சள் நிறத்தில் அழுகி கூழ் போல் ஆகும் தொட்டால் ஒரு வித துர்நாற்றம் வீசும்
கட்டுப்படுத்தும் முறை
இவை மழை அதிகம் தென்படும் போது பூ அழுகல் ஏற்படும் மழை இருக்கும் காலத்தில் காலிஃப்ளவர் நடுவதை தவிர்க்கவும்
முதிர்சியான பூக்களுக்கு
நல்ல தரமான காலிஃபிளவர் பெற நன்கு வளர்ந்த பெரிய இலைகளை மடக்கிவிட்டு காலிஃபிளவர்ரை 5-8 நாட்கள் வரை மூடி கட்ட வேண்டும். இவ்வாறு கட்டினால் பூ நல்ல வெண்மை நிறத்தில் இருக்கும்.
அறுவடை
சரியான முதிர்ச்சியடைந்தவுடன் காலிஃபிளவர் பூக்களை அறுவடை செய்துவிட வேண்டும். காலம் தாமதித்தால் காலிஃபிளவர் விரிந்து கிளைகள் உருவாகி முற்றிய பூக்களாகி வியாபாரத்திற்கு உகந்ததாக இருக்காது

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories