பசுந்தீவனப் பயிர் சாகுபடி: இந்த வகைகள் எல்லாம் கால்நடைகளுக்கு மிகவும் நல்லது..

1.. பசுந்தீவனப் பயிர் சாகுபடி

** நமது நாட்டில் வேளாண்மை மற்றும் கால்நடைகள் இணைந்த கலப்புப் பண்ணை முறையே கையாளப்பட்டு வருகிறது. தரமான கால்நடை வளர்ப்புக்கும், அதிக வருமானம் பெறவும் பசுந்தீவனப் பயிர்களை சாகுபடி செய்வது அவசியம்.

** கால்நடைகளுக்கு புரதம், நார்ச்சத்து, உயிர் மற்றும் தாதுச் சத்துகளை அளிப்பதுடன் கால்நடைகளின் உடல் வெப்பநிலைக் கட்டுப்பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது பசுந்தீவனம். சரியான இனப் பெருக்கத்துக்கும் இது இன்றியமையாதது.

** பசுந்தீவனத்தை பயிர் செய்வதன் மூலம் நிலத்தின் மண்வளம், மண்ணின் நீர் தாங்கும் திறன் அதிகரிக்கிறது.

** களைகள் மற்றும் தேவையற்ற புல், பூண்டுகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

** பயறு வகை பசுந்தீவனங்களை வளர்ப்பதால் மண்ணில் தழைச்சத்தின் வளம் கூடுகிறது.

** பசுந்தீவனப் பயிர்களை தேர்ந்தெடுக்கும் முன் முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

** பயிர் சாகுபடி முறை எளிதாக இருக்க வேண்டும்.

** குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தர வேண்டும்.

** ஊட்டச்சத்து செறிவுள்ளதாகவும் இருக்க வேண்டும். காலநிலை மற்றும்

** மண் அமைப்பு பாதகமாக மாறினாலும், விளைச்சலில் பாதிப்பு இருக்கக் கூடாது.

** பூச்சி மற்றும் நோயால் பாதிக்கப்பட கூடாது.

2.. பசுந்தீவன வகைகள்:

** புல்வகைத் தீவனப் பயிர், தானிய வகைத் தீவனப் பயிர், பயறு வகைத் தீவனப் பயிர், மர வகைத் தீவனப் பயிர் ஆகியவை பசுந்தீவனங்களாகும்.

அ. புல் வகை:

** இந்தத் தீவனத்தில் புரதச்சத்து 1.5 சதம் முதல் 2 சதம், நார்ச்சத்து 6.25 சதம் முதல் 9 சதம் வரை இருக்கும்.

** இறவைப்பயிராக நேப்பியர், கம்பு ஒட்டுப்புல் கோ-1, கோ-2, கோ-3 பயிரிடலாம். கினியாப் புல், பாரா புல், கொளுக்கட்டைப் புல் பயிரடலாம.

** மானாவரியாக கொளுக்கட்டை புல், தீனாநாத் புல் ஆகியவை பயிரிடலாம்.

ஆ. தானிய வகை:

** இறவையாக மக்காச் சோளம் பயிரிடலாம்.

** மானாவரியாக தீவனச் சோளம், தீவனக் கம்பு பயிரிடலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories