பிரபலமாகி வரும் வாழை இலை குளியல் குறித்து விழிப்புணர்வு!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், தற்போது வாழை இலைக் குளியல் பிரபலமாகி வருகிறது. இதனை மக்கள் மத்தியில் மேலும் பிரபலப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாழை இலைக் குளியல், உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்றார்.

வாழை இலை குளியல்
அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் நோய் எதிர்ப்பு ஆற்றலை (Immunity) பெருக்கும் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிலர் வாழை இலைகளை உடலில் சுற்றி கட்டியபடி ஆற்றங்கரையில் சிறிது நேரம் படுத்திருந்தனர். பின்னர், ஆற்றில் குளித்தனர். வாழை இலைகளை உடலில் சுற்றியிருந்த நேரத்தில், உடல் முழுவதும் குளிர்ச்சி அடையும் மற்றும்

பயன்கள்:
இது குறித்து சித்த மருத்துவர்கள் கூறுகையில், நாட்பட்ட கழிவுகள் உடலில் தேங்கி இருப்பதை உடலில் இருந்து வெளியேற்றுவதில் பெரும் பங்கு வகிப்பது வாழை இலை குளியல் ஆகும். இந்த குளியல் உடலில் புதிய செல்களை (New cells) உருவாக்கி புத்துணர்வு பெற வைக்கும். பசியின்மை, கால் வீக்கம், ரத்த சோகை, தீராத வயிற்றுப்புண், அளவுக்கதிகமான சூடு, தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம் குணமாக கெட்ட கொழுப்பினை கரைக்கவும் வாழை இலை குளியல் உதவுகிறது. மாதம் ஒரு முறை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். தீக்காயமடைந்தவர்களுக்கும் வாழை இலையை பயன்படுத்துவது வழக்கம், என்றனர். இந்நிகழ்ச்சியில் கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்க செயலாளர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories