மானாவாரியில் கைக்கொடுக்கும் நித்ய கல்யாணி

மானாவாரியில் கைக்கொடுக்கும் நித்ய கல்யாணி

கோடை காலத்தில் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக நித்ய கல்யாணி கைக் கொடுத்து வருகிறது.

இதனால் பருத்தி மக்காச்சோளத்திற்கு பதில் நித்யகல்யாணி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ராஜபாளையம் சுற்று வட்டாரப்பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கண்மாய் பாசனம் அதிகம்.

 

சிவலிங்காபும், குறிச்சியார்பட்டி, நல்லமநாயக்கர்பட்டி, கோபாலபுரம், வடகரை, பேயம்பட்டி, ஆர்.ரெட்டியப்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளிலும் மானாவாரி மற்றும் நீர் இருப்பு குறைவான இரவை பகுதிகளில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, கம்பு, மிளகாய் போன்ற பயிர்களுக்கு மாற்றாக நித்ய கல்யாணி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கணேசன், ரெட்டியப்பட்டி, விவசாயி:

  • கடந்த ஆண்டு மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் நஷ்டம் ஏற்படுத்தியதால் வறட்சியிலும் தாங்கி வளரக்கூடிய நித்ய கல்யாணி சாகுபடி மேற்கொண்டுள்ளேன்.
  • இப்பயிர் சாகுபடி செய்ய உழவு, களையெடுத்தல், உரம் உள்ளிட்ட செலவுகள் ஏக்கர் ஒன்றிற்கு 10 ஆயிரம் வரை செலவாகிறது.
  • பூக்கள் இலைகள் என அனைத்தையும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் விலை பேசி , அறுவடை செய்து எடுத்து செல்கின்றனர்.
  • செலவுகள் போக ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை கண்டிப்பான லாபம் இருப்பதால், இதை மாற்றுப்பயிராக சாகுபடிக்கு தேர்ந்தெடுத்துள்ளேன்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories