உழுவோர் உழைத்தால்தான் உலகோர் பிழைப்பார்.”
விவசாயம் விவசாயிகளுக்கு மட்டும் முக்கியமானதல்ல அனைவருக்கும் மிகவும் இன்றியமையாத ஒன்று அதனை விளக்கி கூறும் ஒரு வேளாண்மை பழமொழியை இங்கு பார்க்கலாம்.
வாசுகியின் தந்தை ஒரு சிறந்த விவசாயி அவர் வயலில் இயற்கை முறையில் அனைத்து காய்கறிகள் பயிரிட்டு விற்பனை செய்வார்.
ஒருமுறை வாசுகி அவரது தந்தையிடம் நானும் சின்ன வயதில் இருந்து பார்க்கிறேன் விவசாயத்தை எவ்வளவு ஆர்வ மாகவும் சோர்ந்து போகாமலும் செய்கிறீர்களே சிறிய உடல்நலக்குறைவு பொருட்படுத்தாமல் பணி செய்கிறீர்கள் ஏன் அப்பா என்றாள்.
விவசாயத்தில் விளையும் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது அதுவும் நாம் விவசாயம் விவசாயம் செய்ய வில்லையா என்று என்று கேட்கிறார்கள்.
எனவே நாம் மட்டும் விவசாயத்தை சார்ந்தது இல்லை பலரும் விவசாயத்தை தான் சார்ந்து இருக்கிறார்கள் இதைத்தான் நம் முன்னோர்கள் உழுவோர் உழைத்தால்தான் உலகோர் பிழைப்பார் “என்று சொல்வார்கள்.
காரணம் என்னவென்றால் உலகத்தில் உள்ள எல்லா மக்களும் தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் விவசாயத்தின் மூலமாகத்தான் கிடைக்கின்றன பணத் தேவைக்கான விளைபொருட்களை விற்ற லும் மற்றவர்களுக்கு நாம் எல்லா விதத்திலும் பயன் உள்ளவர்களாக இருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது மனதிற்கு நிறைவாக உள்ளது என்றார்
அதற்கு வாசுகி ஏனப்பா நமது விளைபொருட்களுக்கு இவ்வளவு வரவேற்பு உள்ளது என்று கேட்டாள்
அதற்கு அவர் அது வேறு ஒன்றுமில்லை முதலாவது உங்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை விற்பனை செய்வது இயற்கை முறையில் நாங்களே பொருட்களை விற்பது நம்மை நம்பி உள்ள அனைவரையும் மரியாதையுடன் உணர்வுடனும் வரவேற்பது போன்ற காரணங்கள்தான்.
நாம் இப்போது நடந்து கொள்ளும்போது நம்மைத் தேடி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் கூட காய்கறிகளை வாங்க வருகிறார்கள் நம்மை போல இயற்கை முறையில் விவசாயம் செய்து நியாயமான விலைக்கு பொருட்களை விற்றால் மனிதர்களுடைய வேதனையை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்றார்.
ஆம் அப்பா நமக்கு மட்டுமல்ல விவசாயத்தினால் அனைவரும் பயனுள்ளது என்பது இப்போதுதான் எனக்கு புரிகிறது. “உழுவோர் உழைத்தால் தான் உலகோர் பிழைப்பார்” என்ற பழமொழியை நீங்கள் அடிக்கடி கூறுவதற்கான காரணத்தை நான் தெரிந்து கொண்டேன்.