அமிர்த கரைசல் எப்படி தயாரிப்பது?
பசுஞ்சாணம் பசுஞ்சாணம் 10 கிலோ, பசுவின் கோமியம்-3 லிட்டர், நாட்டுச் சர்க்கரை 250 கிராம் ,தண்ணீர் 100 லிட்டர் நிலத்தினுடைய வளமான மேல்மண் ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டு கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்தநாள் இந்த கரைசல் தயாராகிவிடும். இதை ஏக்கருக்கு 50 லிட்டர் கரைசலை பாசன நீருடன் கலந்து விடலாம் அல்லது ஏக்கருக்கு 10 லிட்டர் அளவு தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.
கீரைகளில் பூச்சி தாக்கத்தினை எப்படி கட்டுப்படுத்தலாம்?
கீரைகளில் பூச்சிகள் தாக்குதல் காணப்பட்டால் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் தெளிக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து இடித்து ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலையில் தெளிக்க வேண்டும்.
முருங்கையில் தண்டு துளைப்பானைக் எப்படி கட்டுபடுத்தலாம்?
முருங்கையில் தண்டு துளைப்பான் பூ முட்டை இடக்கூடிய அந்துப்பூச்சி மூலம் உற்பத்தி ஆகிறது.
மொட்டு உருவானவுடன் மூலிகை பூச்சி விரட்டி கரைசல் தெளித்து இந்த பூச்சி தாக்குதலை தடுக்கலாம். மேலும் விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
பப்பாளியில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி?
பப்பாளியில் மாவுப்பூச்சி களின் தொடக்க நிலையில் அவற்றின் குஞ்சுகளை கட்டுப்படுத்த வேப்பம் எண்ணெய் இரண்டு சதம் அல்லது மீன் எண்ணெய் சோப்பு கரைசல் 2.5 சதம் தெளிக்கவேண்டும்.
இயற்கை எதிரிகளான பொறி வண்டுகள் சிறந்த இரை விழுங்கியான ஜிஎஸ்பால்ஜியாஸ் குளவிகள் போன்றவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
வாத்துகளுக்கு என்ன தீவனம் கொடுக்கலாம்?
கோழிக்குஞ்சுகளுக்கு கொடுக்கும் தீவனங்களை யே வாத்துவளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்.
மேலும் வாத்துகள் கோழிகளை விட அதிக அளவில் களைச்செடிகள் மேய்வதால் விவசாயிகள் புறக்கடை பகுதியில் விட்டு வளர்த்தால் களை எடுக்கும் வேலை குறையும்.
மண்புழுக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டி ,அதோடு நொறுக்கப்பட்ட தானியங்களை கலந்தும் வாத்துகளுக்கு கொடுக்கலாம்.