வாத்துகளுக்கு எப்படி தீவனம் அளிக்கவேண்டும்?

விவசாயத்தில் பின்பற்றப்படும் நீர்பாசன முறைகள் என்னென்ன?

நீர்பாசன மூலத்திலிருந்து பலவிதமான முறைகளில் பாசனத்திற்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.

மணலால் அமைக்கப்படும் வாய்க்கால், சிமெண்ட் வாய்க்கால், கான்கிரீட் குழாய்கள், வடிவமைக்கப்பட்ட திறந்த கான்கிரீட் வாய்க்கால் ,பிவிசி குழாய்கள் ஆகியவற்றில் நாம் தேர்ந்தெடுக்கும் முறையை பொருத்து நீர்ப்பாசனம் பாசன நீர் வீணாதல் தடுக்கப்படுகிறது.

விவசாயத்தை பாதிக்கும் கலைகளின் இயல்புகள் என்னென்ன?

களைகள் பொதுவாக எல்லா காலங்களிலும் தோன்றும் .செழித்து வளரும் தன்மை கொண்டதாகவும் களைகளின் விதைகள் பயிரின் விதைகளை விட அதிகமாகவும் மிகச் சிறியதாகவும் இருக்கும்.

பயிரின் விதைகளை போன்று நிறம் அமைப்பை பெற்றிருந்தால் விதைகளிலிருந்து எளிதாக பிரித்தெடுக்க முடியாது.

அறுவடையின்போது கலைகளின் விதைகள் தானியங்கள் உடன் சேர்ந்து எடுத்துச் செல்லப்படுவதால் மீண்டும் சந்ததியை பெறுகின்றது.

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நன்மைகள் என்னென்ன?

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பயிர் சாகுபடியில் எதிர்பாராத பிரச்சனை ஏற்பட்டு பயிர் இழப்பு ஏற்படும் போது மற்ற உப தொழில்கள் அதை ஈடுகட்டுகிறது .

விவசாயிகளிடம் உள்ள நிலப்பரப்பில் இருந்து எப்போதும் கிடைக்கும் வருமானத்தை விட கூடுதல் வருமானம் கிடைக்க செய்வதுடன் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரக்கூடியதாகவும் விளங்குகிறது.

தானியங்களை ஏன் உடைத்து சேமித்து வைக்கவேண்டும்?

உடைக்கப்பட்ட தானியங்களை துளைப்பான் பூச்சிகள் தாக்குவதில்லை எனவேதான் தானியங்களை உடைத்து சேமித்து வைக்கவேண்டும்.

பயறு வகை தானியங்களை இரண்டாக உடைத்து பு டைக்கும்போது உடைக்கப்பட்டு தானியங்களிலிருந்து தோள்கள், தூசிகள், கற்கள் போன்றவை நீக்கிவிட்டு சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும்.

வாத்துகளுக்கு எப்படி தீவனம் அளிக்கவேண்டும்?

வாத்துகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளை தீவனமாக அளிக்க வேண்டும்.

வாத்துகளுக்கு நாளொன்றுக்கு புல்வகை பசுந்தீவனம் 300 கிராம் அடர்தீவனம் 100 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பு 5கிராம் ஆகியவற்றுடன் விட்டமின்கள் மற்றும் தாது உப்புக் கலவை சேர்த்து அளிக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories