வாத்து நோய்மேலாண்மை

 

 

அதிக முட்டை இடுவதற்கு குடற்புழுநீக்க முக்கியமானது. வார்த்தைகளை தட்டைப்புழு உருளைப்புழு நாடாப்புழு தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் முட்டை உற்பத்தி திறன் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.

வாத்து பிளேக் நோய்

இந்த நோயில் இருந்து வாத்துகளை பாதுகாப்பதற்கு தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். வாத்து காலரா விற்கு 3 முதல் 4 வாரத்திற்கு எட்டு முதல் 12 வாரத்திற்கு முன் தடுப்பூசி போட வேண்டும்.

கல்லீரல் அழற்சி

இரண்டு அல்லது மூன்று வார வயதுடைய குஞ்சுகளை இந்த நோய் அதிகம் பாதிக்கிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை கிடையாது. இனச்சேர்க்கைக்கு ஈடுபடும் வாத்துகளுக்கு வீரியம் குறைக்கப்பட்ட வைரஸ் தடுப்பூசிகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்ட வேண்டும் .இதனை முட்டை உற்பத்தியைத் தொடங்கும் முன்பு செய்ய வேண்டும் .ஒரு நாள் வயதான வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பூசிகளை அளிப்பது நல்ல பயனை தரும்.

விற்பனை

இதன் முட்டைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இறைச்சி வாத்துகள் வளர்ந்தவுடன் சரியான பருவத்தில் விற்பனை செய்யவேண்டும். ஒரு வார வயதுடைய வாத்துக்குஞ்சு ஒன்று 20 ரூபாய்க்கும் 3 முதல் 4 மாதம் வளர்த்து ஒரு ஜோடி 250 முதல் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories