உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை : விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு!!

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதன் மூலம் 3 மணி நேரத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் மற்றும்

கொரோனா பரிசோதனைக்கு புதிய முறை
கொரோனா தொற்று ஏற்பட்டது முதல், அதற்கான பரிசோதனை கட்டமைப்புகளை இந்தியா பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மிக எளிமையான , புதுமையான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மைய (NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறைதான் இது. இது எளிதாகவும், விரைவாகவும், சவுகரியமாகவும், சிக்கனமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதில்

3 மணி நேரத்தில் முடிவு
இதில் 3 மணி நேரத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்பதால், கிராமங்கள் மற்றும் பழங்குடியின பகுதிளுக்கு இந்த பரிசோதனை பொருத்தமாக இருக்கும். இது குறித்து சுற்றுச்சூழல் வைராலஜி பிரிவு மூத்த விஞ்ஞானி, டாக்டர் கிருஷ்ணா கையர்னர் கூறியதாவது, சளி பரிசோதனை முறைக்கு நேரம் ஆகிறது. மேலும், மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து சளி மாதிரிகளை சேகரிக்க வேண்டியுள்ளதால், இது நோயாளிகளுக்கு சற்று அசவுகரியமாகவும் உள்ளது.

மேலும், இதை பரிசோதனை மையத்துக்கு கொண்டு செல்ல நேரம் ஆகிறது. வாய் கொப்பளித்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை நோயாளிகளுக்கு எளிதாக உள்ளது மற்றும் முடிவுகளை 3 மணி நேரத்தில் அறிய முடியும் என்று .தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories