உருளைக்கிழங்கின் அங்கக பயிர் சாகுபடி

உருளைக்கிழங்கின் அங்கக பயிர் சாகுபடி

உருளைக்கிழங்கு சாகுபடி

உருளைக்கிழங்கு அங்ககச் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால்

 • பயன்படுத்துவர்களிடமிருந்து அதிகப்படியான எதிர்பார்ப்பு
 • லாபம் கொடுக்க கூடியது
 • பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்யலாம்
 • இதை சாகுபடி செய்வதால் களைகளைக் கட்டுபடுத்தலாம்

அங்கக உருளைக் கிழங்கை சாகுபடி செய்வதில் ஏற்படும் இடர்பாடுகள்

 • தேவையான அளவு ஊட்டச்சத்து அளிக்க வேண்டும்
 • உருளை கருகல் நோயை தடுக்க வேண்டும்
 • களைகளை கட்டுபடுத்த வேண்டும்

சாகுபடி முறைகள்

மண்

மண் கெட்டியாக இல்லாமல், நன்கு நீர் வடியக் கூடிய நிலையைில் இருக்க வேண்டும். மண்ணின் கார அமிலத் தன்மை 4.8 முதல் 5.4 ஆக இருக்க வேண்டும். இது ஒரு குளிர்காலப் பயிராகும். பொதுவாக உருளைக் கிழங்கு மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. வருடத்திற்கு 1200-2000 மி.மீ. மழை பொழியும் பகுதியில் சாகுபடி செய்யலாம்.

பருவம் மற்றும் பயிரிடும் முறை

மலைப்பகுதிகள்

கோடைகாலம் – மார்ச் -ஏப்ரல்

இலையுதிர்காலம் – ஆகஸ்ட் -செப்டம்பர்

பாசனம்- ஜனவரி – பிப்ரவரி

சமவெளிப்பகுதி: அக்டோபர்-நவம்பர்

விதை

 • 40-50 கிராம் எடையுடைய நன்கு முதிர்ச்சி அடைந்த நோயற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். விதையளவு 3000-3500 கிலோ/ஹெக்டேர் உருளைக்கிழங்கு இரகங்களை தேர்வு செய்தல்
 • அங்கக உருளைக்கிழங்கு இரகங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு 2 விதிமுறைகள் உள்ளன.
 • அங்கக உற்பத்திக்கு ஏற்றவாறு வளரக்கூடிய இரகங்களாக இருக்க வேண்டும்
 • அனைத்து அங்கக விளைபொருட்களை சந்தைப்படுத்துவது போல் இந்த இரகங்களும் சந்தைப்படுத்துவதற்கு தகுதியுள்ளவாறு இருக்க வேண்டும்
 • குப்ரி ஸ்வாமா, குப்ரி கிரிராஜ் மற்றும் குப்ரி ஸிப்சோனா போன்றவை அங்கக உற்பத்திக்கு ஏற்றவை. ஏனென்றால் அவை கருகல் நோய்க்கும், புழுக்களின் தாக்குதலையும் எதிர்த்து வளரக் கூடியவை.

வயலை தயார் செய்தல்

வயலை நன்கு பண்பட உழவேண்டும். மலைப்பகுதிகளில் 1.40 அளிவற்கு உள்பக்கப் சிரிந்திருக்க வேண்டும். மேற்பகுதியின் உள்விளிம்புகளின் வடிவதற்கு தகுந்தவாறு அமைக்க வேண்டும். 45 செ.மீ. இடைவெளி விட்டு பள்ளம் தோண்ட வேண்டும்.

பாசனம்

பயிரிட்ட 10 நாட்களுக்குப் பிறகு பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும்.

உரமிடுதல்

 • பயிரிட்ட 60 நாட்களுக்கு பிறகு லுபினுடன் பசுந்தாள் உரமிடவேண்டும்
 • மாட்டுக் குழம்பு உரத்தை 75 கிராம்/ ஹெக்டேர் என்ற அளவில் எடுத்தது 40 லிட்டர் நீரில் கரைத்து நிலத்தை தயார் செய்யும்போது தெளிக்க வேண்டும்.
 • நன்கு சிதைந்த தொழு உரத்தை 50 டன்/ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தைத் தயார் செய்யும் போது அளிக்க வேண்டும்.
 • கம்போஸ்ட் உரத்தை 50 டன்/ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தைத் தயார் செய்யும் போது அளிக்க வேண்டும்
 • மண்புழு உரத்தை 5டன் /ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தைத் தயார் செய்யும் போது அளிக்க வேண்டும்
 • வேப்பங்கட்டியை 1250 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தைத் தயார் செய்யும் போது அளிக்க வேண்டும்.
 • உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஒவ்வொன்றும் 25 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தைத் தயார் செய்யும் போது அளிக்க வேண்டும்
 • உரக்குழிக் கழிவுகளை 5 கிலோ/ ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து 100 லிட்டர் நீரில் கரைத்து பயிரிட்ட 45,00, 75 வது நாட்களுக்குப் பிறகு தெளிக்க வேண்டும்.
 • டோலாமைட் 10 டன் /ஹெக்டேர் என்ற அளவில் அளிப்பதால் மண்ணின் கார அமிலத் தன்மையை அதிகரிக்கலாம்

பயிரிட்ட பின் செய்யும் உழவு முறைகள் களை எடுப்பதற்கான நேரம் பயிரிட்ட 60 நாட்களக்குள் செய்ய வேண்டும். முதல் களை எடுப்பு 45வது நாளில் செய்ய வேண்டும். இரண்டாவது களை எடுப்பு மற்றும் மண் அணைத்தல் பயிரிட்ட 60 நாட்களில் செய்ய வேண்டும். களைக்கொல்லிகள் இல்லாமல், களைகளை பின்வருமாறு கட்டுப்படுத்தலாம்.

வயலை பெரிய களைப்பிரச்சனைகள் இல்லாதவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். களை நாற்றுக்களை உருளை நாற்றுக்கள் முளைப்பதற்கு முன் தீயிட்டு எரிக்க வேண்டும். இதற்கு அதிக செலவாகும். இயந்திர களை எடுப்பு செய்யலாம். அளவான கைகளை எடுப்பு செய்வதால் போதுமானது.

வளர்ச்சி ஊக்கிகள்

 • பஞ்ச காவ்யாவை 3% விதைத்த ஒரு மாதத்திற்கு பிறகு 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பு செய்ய வேண்டும்.
 • மண்புழு உரத்தை 10% எடுத்து விதைத்து ஒருமாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும்
 • மாட்டுக் கொம்பு சிலிக்கா 2.5 கிலோ/ ஹென்டேர் என்ற அளவில் எடுத்து 50 லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 65 நாட்களுக்கு பிறகு தழைத் தெளிப்பு செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

அசுவிணி

 • 10% வேப்ப இலை சாற்றை விதைத்த 45,60,75வது நாட்களுக்குப் பிறகு தழைத் தெளிப்பு செய்ய வேண்டும்.
 • 10% பூண்டு மிளகாய் சாற்றை விதைத்த 45,60,75வது நாட்களுக்குப் பிறகு விதை தெளிப்பு செய்ய வேண்டும்
 • வேப்ப எண்ணெய் 3% தழைத் தெளிப்பு செய்ய வேண்டும்

வெட்டுப் புழுக்கள்

 • வெயில் காலங்களில் தாய்ப்பூச்சிகளைக் கவர விளக்குப் பொறியை வயலில் அமைக்க வேண்டும்.
 • தெளிப்பு நீர்ப்பாசன அமைப்பை அமைத்து, பகல் வேளைகளில் பாசனம் செய்தால் புழுக்களை மண்ணிற்கு வெளியே கொண்டு வரலாம். இவற்றை பறவைகள் உண்பதால் கட்டுப்படுத்தலாம்
 • பைரித்ரம் கொல்லியை மண்ணில் வைக்கலாம்

வெள்ளை வண்டுகள்

 • கோடை உழவு செய்வதல் கூட்டுப் புழு மற்றும் தாய்ப்பூச்சிகளை மண்ணிற்கு வெளியே கொண்டு வரலாம்
 • விளக்குப் பொறிகளை ஏப்ரல்-மே மாதங்களில் இரவு 7 முதல் மணியில் பொருத்தலாம்
 • காலை வேளைகளில் வண்டுகளை கையால் எடுத்து அகற்றலாம்
 • ஜீலை-ஆகஸ்ட் மாதங்களில் 3வது நிலை புழுக்களை கையால் எடுத்து அகற்றலாம்
 • மெட்டாஹார்சியம் அனிசோபிலே 20 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் நிலத்தைத் தயார் செய்யும் போது அளிக்க வேண்டும்
 • உருளைக் கிழங்கு அந்துப் பூச்சி
 • கிழங்குகளை மேலோட்டமாக விதைப்பதை தடுக்க வேண்டும். கிழங்குகளை 10-15 செ.மீ. ஆழத்தில் நட வேண்டும்
 • இனக்கவர்ச்சிப் பொறிகளை ஒரு எக்டருக்கு 20 என்ற எண்ணிக்கையில் பொருத்தலாம்
 • பயிரிட்ட 60 நாட்களுக்குப் பிறகு மண்ணை அணைக்க வேண்டும்
 • இலையில் சேதம் ஏற்படுவதைத் தடுக்க, வேப்பங்கொட்டை சாற்றை தெளிக்க வேண்டும்
 • சேமிப்பு அறைகளில் இனக்கவர்ச்சிப் பொறியை வைக்க வேண்டும்
 • லேன்டனா அல்லது யூபோடோரியம் செடிக் கிளைகளை சேமிப்பு அறையில் கிழங்குளின் மேற்பரப்பில் போட்டு முடுவதால் அந்துபூச்சிகள் முட்டையிடுவதைத் தடுக்கலாம்

நோய்கள்

உருளைக் கருகல் நோய்

 • பருவம் முன்னே அறுவடை செய்தல், பருவம் முன் இரகங்களால் கருகல் நோய் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுத்தாது
 • நோயற்ற நல்ல தரமான விதைகளை பயிரிட பயன்படுத்த வேண்டும்
 • கருகல் நோய்க்கு அதிக எதிர்ப்பு சக்தியுள்ள இரகங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
 • கருகல் நோய்க்கான எச்சரிக்கைகளை கவனமாக கேட்டு பின்பற்ற வேண்டும்
 • கருகல் நோய் அதிகளவு இருந்தால், பரிந்துரைக்கப்பட்ட பூஞ்சாணக் கொல்லியை பயன்படுத்தலாம்
 • நிலத்தில் படரும் கொடிகளை அகற்ற வேண்டும்
 • அக்ரி ஹோட்ரா சாம்பலை 200 கிராம் அக்ரி ஹோட்ரா சாம்பலை ஒரு லிட்டர் மாட்டு கோமியத்துடன் கலந்து 15 நாட்கள் வைத்திருந்து, தெளிப்பதற்கு முன் 10 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளிவிட்டு 3 முறை தெளிக்க வேண்டும்

பழுப்பு அழுகல் நோய்

 • நோயற்ற விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
 • தேவையான வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்
 • நோயுற்ற செடிகளை அகற்றி, அழிக்க வேண்டும்
 • நச்சுயிரி நோய்கள்:
 • நச்சுயிரி தாக்காத கிழங்குளை பயிரிட பயன்படுத்த வேண்டும்
 • நோய் தாக்கிய செடிகளை அகற்றி, அழிக்க வேண்டும்
 • நோய் பரப்பும் காரணியான அகவிணியை, வேப்ப இலை சாறு 10% எடுத்து பயிரிட்ட 45, 60, 75 வது நாட்களில் தெளிக்க வேண்டும்

நூற் புழுக்கள்

 • பயிரிட்ட அதே வயலில் திரும்பவும் கிழங்கை பயிரிடக்கூடாது. காய்கறி பயிர்கள், பசுந்தாள் உரப்பயிர்களுடன் பயிர் சுழற்சி முறை மேற்கொள்ள வேண்டும்
 • குப்ரி ஸ்வர்ணா என்ற இரகம் நூற்புழுக்களுக்கு அதிகளவு எதிர்ப்பு சக்தி உடையது. இதைப் பயிரிட வேண்டும்.
 • சூடோமோனஸ் ப்ளுரோசென்ஸ் 10 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் அளிக்க வேண்டும்
 • கடுகுப் பயிரை ஊடுப் பயிராக உருளைக் கிழங்கு விதைக்கும் போது விதைத்து, 45 நாட்களில் கடுகுப் பயிரை அறுவடை செய்யும் போது நூற்புழுக்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

இலாபம் அகற்றுதல்

அ. ஹாலமை அறுத்தல்

ஆ. ஹாலமை வெளியே எடுத்தல்

இ. எரித்தல்

அழித்தல் அல்லது கந்தக அமிலத்தை ஊற்றுதல் கூடாது

அறுவடை

 1. அறுவடை செய்ய கிழங்குகளைத் தோண்டி எடுத்து சுத்தம் செய்து கோணியில் சேகரிக்கலாம்.
 2. விதைக்காக கிழங்குகளை அறுவடைக்கு 15-இல் இருந்து 20 நாள்களுக்கு முன்பிருந்து நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.
 3. இதன் மூலம் கிழங்குகளின் தோல் தடிமனாகி அதன் சேமிப்புக் காலத்தை அதிகப்படுத்தும்.
 4. மேலும் வைரஸ் நோய்களை மற்றச் செடிகளுக்கு பரப்பும் அசுவினி பூச்சிகளின் பெருக்கத்தைத் தடுக்கிறது.
 5. இதை சிறந்த முறையில் விதைக்காகப் பயன்படுத்தலாம்.
 6. அறுவடை செய்த கிழங்குகளை ஓரிடத்தில் குவியலாக வைப்பதன் மூலம் அவற்றை சுத்தம் செய்வது எளிதாகிறது.
 7. பின்னர் பெரிய, சிறிய, நடுத்தர அளவுள்ள கிழங்குகளைப் பிரித்தெடுக்க வேண்டும். நோய், பூச்சித் தாக்கிய கிழங்குகளை தனியே எடுத்துவிட வேண்டும்.

சேமிப்பு

 • அங்ககமில்லாத உருளைக்கிழங்கிலிருந்து தனித்து சேமிக்க வேண்டும்
 • சேமிப்பு அறைகளில் பூஞ்சாணக் கொல்லிகளையோ, முளைவிடுவதை கட்டுப்படுத்தும் காரணிகளையே பயன்படுத்தக்கூடாது

மகசூல்:

 • 120 நாட்களில் 15-20 டன்/எக்டர் என்ற அளவில் மகசூலைத் தரும்

ஆதாரம் : வேளாண்மைத்துறை, திருவள்ளுர் மாவட்டம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories