கால்நடைத் தீவனத்தில் மீன் உணவின் பங்கு!

கால்நடைத் தீவனத்தில் மீன் உணவின் பங்கு!

 

கால்நடைத் தீவனத்தில் மீன் உணவின் பங்கு!

ருவாட்டுத்தூள் எனப்படும் மீன் உணவானது, புதிய மீனை அழுத்தி, உலர்த்தி, அரைத்து வேக வைப்பதன் மூலம் கிடைப்பதாகும். இது, மீன்களைப் பிடிக்குமிடம், மீன்களின் துணைப்பொருள்கள் மற்றும் மீன் உணவைத் தயாரிக்கும் முறையைப் பொறுத்துப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

மீன் உணவின் மூலதனம்

மீன் உணவுக்காகவே அறுவடை செய்யப்படும் நெத்திலி, கானாங் கெளுத்தி, எண்ணெய் மீன், கடல் மீன் வகைகள். இதர மீன்பிடி தளங்களிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள். மக்கள் வீணாக்கும் மீன்கள் மற்றும் கழிவுகள். இந்த உணவில், எளிதில் செரிக்கும் சிறந்த புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகள் உள்ளன. மீன் உணவின் தரமானது, பயன்படுத்தபடும் மூலப்பொருள்கள் மற்றும் தயாரிப்பு உத்திகளைச் சார்ந்து அமையும்.

தரமான மீன் உணவை, நல்ல மூலதன மீன்களில் இருந்து பெறலாம். எனினும், இந்த மீன்களில் உள்ள புரதம் மற்றும் எண்ணெய் முறிவைத் தடுப்பதற்கு, இவற்றைக் குளிர்விக்க வேண்டும். அல்லது இரசாயன முறையில் பதப்படுத்த வேண்டும்.

மீன் உணவுத் தயாரிப்பு

புதிய மீன் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீனில் எண்ணெய், கெட்டிப் பொருள்கள், நீர் ஆகிய முக்கியப் பொருள்கள் உள்ளன. இந்த மீன்களை 85-90 டிகிரி செல்சியஸில் வேக வைத்து அழுத்தி அவற்றிலுள்ள நீர் வெளியேற்றப்படும். இது அழுத்தக்கட்டி எனப்படும். இப்படி வெளியேறிய நீரில் மிதக்கும் துகள்களைச் சுழல் படிமவிசை மூலம் படிய வைக்க வேண்டும். பின் கீழே படிந்ததைக் கெட்டியாக்க லேசாக ஆவியாக்க வேண்டும். இது பசைநீர் எனப்படும்.

பிறகு, அழுத்தக் கட்டியையும், பசைநீரையும் சேர்த்து உலர்த்தி இயந்திரத்துள் அனுப்ப வேண்டும். கடைசியாக, மீன் உணவில் 10% ஈரப்பதம் இருக்க வேண்டும். நல்ல தரமான மீன் உணவில் 66% புரதம், 8-11% கொழுப்பு, 12% சாம்பல் சத்து இருக்க வேண்டும்.

மரு.செ.ஜோதிகா, முனைவர் த.பாலசுப்ரமணியம், மரு.மா.மோகனப்பிரியா, முனைவர் ச.த.செல்வன், பன்றி இனவிருத்திப் பிரிவு, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories