கோதுமை – ஊட்டச்சத்துக் குறைபாடு
தழைச்சத்து
அறிகுறிகள்
- பயிர்கள் வளர்ச்சி குன்றி இருக்கும்
- அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்
- வயல்வெளி முழுவதும் மஞ்சள் கலந்த பச்சை நிறமாக காட்சியளிக்கும்
- தூர்கட்டுதல் குறைந்து காணப்படும்
- கதிரில் மணி பிடித்தல் குறைந்து விடும்
நிவர்த்தி
- எக்டருக்கு 330 கிலோ யூரியாவை பிரித்து மூன்று முறை(110 கிலோ/ ஏக்கர்) என்ற அளவில் மண்ணில் இடவேண்டும்.
- 10 கிராம் யூரியாவை 1 லிட்டர் நீரில் கரைத்து 10 நாள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்கவேண்டும்.
மணிச்சத்து
அறிகுறிகள்
- பயிர்கள் வளர்ச்சி குன்றியிருக்கும்
- தூர்கட்டுதல் குறைந்துவிடும்
- இலைகள் கரும்பச்சை நிறமாக மாறி நெட்டுக்குத்தாக இருக்கும்
- மணிப்பிடித்தல் குன்றிவிடும்
நிவர்த்தி
- 6 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை 100 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து. மறுநாள் நன்கு கலக்கி, பின் காலையில் மேலாக வடித்து பயிர்கள்மீது 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவேண்டும்.
சாம்பல்சத்து
அறிகுறிகள்
- நீண்ட பழுப்புநிறப் புள்ளிகள் இலையின் நடுவிலிருந்து நுனிவரைக் காணப்படும்
- முதிர்ந்த இலைகளில் இப்புள்ளிகள் அதிகமாகக் காணப்படும்.
நிவர்த்தி
- 5 கிராம் பொட்டாசியம் குளோரைடை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும்.
காப்பர் சத்து
அறிகுறிகள்
- இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இலைகள் சுருண்டு இலையின் நுனியிலும், விளிம்புகளிலும் திருகி இருக்கும்.
- தலைப்பகுதிகள் வெளிரிக் காணப்படும்
நிவர்த்தி
காப்பர் சல்பேட் 0.3% (3 கிராம் /லிட்டர்) தழை தெளிப்பாக தெளிக்கவும்
மாங்கனீசுசத்து
அறிகுறிகள்
- நரம்பிடைப் பகுதியில் மஞ்சள் நிறக் கோடுகள் இலை நுனியிலிருந்து அடிவரைச் செல்லும். பின்னர் இலை முழுவதும் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து விடும்.
நிவர்த்தி
5 கிராம் மாங்கனீசு சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும்.
துத்தநாகச்சத்து
அறிகுறிகள்
- இலையின் அடிப்பாகத்தில் நடு நரம்பின் இருபுறமும் பட்டையான மஞ்சள் நிறக் கோடுகள் தோன்றும்.
- சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கீழ் இலைகளில் காணப்படும்.
- இலைப் பரப்பு குறைந்துவிடும்.
- மணி பிடித்தல் காலதாமதாமாகும். வளர்ச்சி சீராக இருக்காது.
நிவர்த்தி
- மண்ணில் அடியுரமாக 25 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும்.
- 5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இலை வழியாக 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்