தெலுங்கானா மாநில நெல் ஆராய்ச்சி நிலையம் மூலமாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நெல் ரகம்.

தெலுங்கானா மாநில நெல் ஆராய்ச்சி நிலையம் மூலமாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நெல் ரகம்.

வேளாண்மை செய்திகள்.

இதன் வயது சுமார் 125 – 130 நாட்கள். அதாவது கோடைகால பட்டத்தில் சுமார் 120 முதல் 125 நாட்களிலும், சம்பா பட்டத்தில் 130 நாட்களிலும் அறுவடைக்கு வரும்.

 சமீபகாலமாக பல மாநிலங்களில் பரவலாக சாகுபடி செய்யப்படும் BPT – 5204 என்ற ரகத்தில் இருந்து Mutation breeding என்ற முறை மூலம் சுமார் 10,500 மாதிரிகள் எடுக்கப்பட்டு இதில் சிறந்த மாதிரியாக இந்த ரகம் (II RR 93R ) தேர்வு செய்யப்பட்டு உள்ளது .

இந்த தேர்வுக்கு காரணம் என்னவென்றால் BPT – 5204 நெல் ரகத்தை பல நோய்கள் தாக்குவதால் அதிக இரசாயன பூச்சி கொல்லிகள் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள்.

 அடுத்து இந்த அரிசியை சமைத்து உண்பவர்கள் இதன் மூலம் தீராத பல வியாதிகளுக்கு உட்படுகின்றனர் . இது மட்டுமன்றி இந்த ரகத்தை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடி செலவு அதிகரிக்கிறது. நஷ்டம் ஏற்படுகிறது.

 இந்த புதிய ரகத்தின் சிறப்பியல்புகள்

1. தாய் ரகத்தை விட ஆயுள் குறைவு . இதனால் வயலுக்கு பாய்ச்சும் தண்ணீர் ஓரளவு சேமிக்க படுகிறது.

2. பதினைந்து முதல் இருபது நாள் நாற்று கள் நடவு செய்யலாம். பாரம்பரிய முறையில் நாற்று விட்டாலே ஏக்கருக்கு சுமார் பதினைந்து கிலோ விதை நெல் போதுமானது.

3. அதிக தூர் கட்டும் தன்மை . ஒரு தூரில் சுமார் 25 முதல் 40 தூர்கள சாதாரணமாக வரவாய்ப்பு . விவசாயியின் திறமையை பொறுத்து இன்னும் அதிகரிக்கலாம். களர் உவர் தன்மையை ஓரளவு தாங்கும் சக்தி.

4. நோய் தாக்குதல் மிக குறைவு . அதாவது BPT 5204 ரகத்தை போன்று , குருத்து பூச்சி, இலை சுருட்டு பூச்சி, மஞ்சள் வைரஸ், இலைக் கருகல் , இலையுறை கருகல் , புகையான் (சில சமயங்களில் ) , பனி அதிகமானால் நெல் மணிகள் மீது கரும் புள்ளிகள் ஆகிய இந்த தாக்குதல்கள் இந்த ரகத்திற்கு கிடையாது.

5 திடமான பருத்த அடித் தண்டு உடைய தூர்கள் என்பதால் சாயும் தன்மை மிக குறைவு . BPT ரகத்தை விட உயரம் அதிகம். மாடுகளுக்கு சுவையான வைக்கோல்.

6, சற்று அகலமான இலைகள். இதனால் ஒளிச்சேர்க்கை நன்கு நடப்பதால் திடமான நெல் மணிகளுக்கு வாய்ப்பு. BPT – 5204 ரகத்தை விட மிக சன்னமான நெல் மணிகள் . நிலைப்பு தன்மை உடைய சாதம்.
[17/05 20:10] Sridhar naidu: 7. இதனால் சந்தை மதிப்பு அதிகம் தெலுங்கானா நெல் வியாபாரிகளால் இதற்கு A+ தகுதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் இதை சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் இதை கண்டுபிடித்த வேளாண் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

8, நீளமான கதிர்களை கொண்ட நெல் ரகம். ஒரு கதிரில் சுமார் 350 நெல் மணிகள் வரை உள்ளன . மணிகள் உதிரும் தன்மையும் குறைவு .

9. இரசாயண விவசாயத்தில் இதன் அதிகபட்ச மகசூல் ஏக்கருக்கு சுமார் 50 மூட்டைகள் ( 67 kg) வரை மகசூல் வருவதாக தகவல்.

10. இயற்கை விவசாயத்தில் ஏக்கருக்கு அதிகபட்சமாக சுமார் 40 மூட்டைகள் வரை வருவதாக தகவல். வருடத்தில் இரண்டு போகம் இந்த புதிய ரகத்தை சாகுபடி செய்யலாம். சத்து குறைந்த மண்ணிலும் ஒரளவு நன்கு மகசூல் கிடைப்பதாக தகவல்.

11. இதனை முயற்சி செய்ய விருப்பம் உள்ள நம் தமிழக விவசாயிகள் குறைந்த பரப்பளவில் இந்த ரகத்தை சாகுபடி செய்து பின்னர் விரிவு படுத்தலாம். தற்போது விதை நெல் MiNi kit அளவிலேயே விவசாயிகளுக்கு வழங்க படுவதால் சற்று பற்றாக்குறை நிலவுவதாக இதை கண்டுபிடித்த வேளாண் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஸ்ரீதர்
இயற்கை விவசாயி
திருவள்ளூர் மாவட்டம்
9092779779

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories