கால்நடைகளுக்கும் சாக்லேட் கண்டுபிடிப்பு
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது .இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கும் சாக்லேட் வடிவிலான உணவை கண்டுபிடித்துள்ளார்கள். இதில் பல்வேறு வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளதால் கால்நடைகளின் இனப்பெருக்க மற்றும் பால் சுரப்பு அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
பால் உற்பத்தி அதிகரிப்பு
மல்டி வைட்டமின், புரத சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த சாக்லேட் தீவனம், இல்லாத நேரங்களில் கால்நடைகளுக்கு வழங்கலாம் அல்லது இதர தீவனங்களுடன் சேர்த்து வழங்கலாம்.
இந்த சாக்லேட்களை உண்ணும் கால்நடைகள் அதிக பால் சுரக்கும் .இது இனப்பெருக்க வளர்ச்சி மற்றும் கருத்தரித்தல் விகிதத்தையும் அதிகரிக்கச்செய்யும்.
தீவனம் கால்நடைகளின் மேய்ச்சல் ஆகியவற்றுக்கு மாற்றாக இந்த சாக்லெட்டை பயன்படுத்தலாம்.
விரைவில் விற்பனை
மாநில கால்நடைகள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உதவியுடனும் விரைவில் மாநிலம் முழுவதும் வினியோகம் செய்யப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் 500 கிராம் எடையிலான ஒரு சாக்லேட் 25 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளது. இந்த சாக்லேட்டுகளை விற்பனை செய்ய மாநில அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் விரைவிலேயே அது சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்தமாக தயாரிப்பு ஆலைகளை அமைக்க விரும்பும் கால்நடை அறிவியல் பட்டதாரிகளுக்கு இந்த சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.