குறுவை சாகுபடிக்கான நெல் விதைகள் விற்பனை, விவசாயிகள் பயன் பெறுங்கள்!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் குறுவை சாகுபடிக்கான நெல் விதைகள் விற்பனைக்குத் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே,

நெல் விதைகள் விற்பனை
இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் ராமசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு கோ 51, ஆடுதுறை 53, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஏ.எஸ்.டி. 16, டி.பி.எஸ். 5 போன்ற நெல் ரகங்கள் ஏற்றதாக உள்ளன. இதில், கோ 51 மற்றும் ஆடுதுறை 53 ஆகிய ரகங்கள் தற்போது விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மற்றும்

இதில், சன்ன ரகமான கோ 51 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரகமாகும். இதன் வயது 105 முதல் 110 நாள்கள். இது சன்ன ரகமாக இருப்பதால் அதிக விலைக்கு விற்க ஏதுவாக அமைகிறது. மேலும், தழைச்சத்தை பிரித்து இடும்போது சாயாமல் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறையிலிருந்து 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரகம் ஆடுதுறை 53. இது 100 முதல் 110 நாள்கள் வயதுடையது. இந்த ரகத்தில் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருக்கும்.

கோ 51 மற்றும் ஆடுதுறை 53 ரக விதைகள் கிலோ ரூ. 33-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடா்பு கொண்டு விதைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories