நாட்டு ரக விதைகள் வேண்டுமா? – இங்கே இலவசமாகக் கிடைக்கும் விவரம் உள்ளே!

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் இயங்கும் பாம்பாட்டி மரபு விரை சேமிப்பகம், நாட்டு ரக விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

நாட்டு விதைகள் (Country seeds)
காரியாப்பட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சரவணகுமார். கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக 92க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டுக் காய்கறி மற்றும் சிறுதானிய வகை விதைகளைத் தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கி பரவலாக்கம் செய்து வருகிறார் மற்றும்

நெல் விளையும் பூமியாகத் தமிழகம் திகழ்கிறது. ஆனால் கால ஓட்டம், உற்பத்திப் பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாரம்பரிய விதைகள் அழிக்கப்பட்டு குறுகிய காலம் பயனளிக்கும் விதைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன இதில்

சத்து குறைகிறது (Nutrition decreases)
இதனால் நெல் மற்றும் காய்கறிகளில் சத்து குறைவதுடன் அதனை உண்ணும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண நினைத்த விவசாயி சரவணகுமார் பாரம்பரிய விதைகளை மீட்டு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக பல இடங்களுக்கு சென்று நாட்டு விதைகளைச் சேகரித்து அவற்றைப் பயிரிட்டு உற்பத்தி செய்கிறார் எனவே,

அவ்விதைகளை மண்பாண்டங்கள் மற்றும் சுரைக் குடுவைகளில் சேகரித்து மக்களுக்கு இலவசமாகவும், விலை கொடுத்து வாங்கும் திறன் கொண்ட விவசாயிகளுக்கு குறைந்த விலையிலும் வழங்கி வருகிறார். பூசணி, சுரைக்காய், பயிறு வகைகள் என 90க்கும் மேற்பட்ட விதைகளை சேகரித்து வருகிறார்.

டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள சரவணகுமார், 11 வருடம் தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராகப் பணியாற்றினார். பிறகு, இயற்கை விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வத்தினால் விவசாயத்தை முழுநேரவேலையாகச் செய்ய ஆரம்பித்தார்.

நாட்டு விதைகளின் கருவூலம் (Treasury of country seeds)
இது குறித்து சரவணகுமார் அவர் கூறியதாவது, நாற்பது ஐம்பது வருடத்திற்கு முன் நாட்டுவிதைளின் கருவூலமாக கிராமங்கள் தான் இருந்தன. ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றத்தால் விதைகள் பரவலாக்கமாயிற்று. பசுமைப்புரட்சியின் தாக்கம் உற்பத்திப் பெருக்கத்தால் விவசாயிகள் மத்தியில் நாட்டு விதைகள் பயன்பாடு குறைந்து போயிற்று என்றார்.

பச்சை நீள வெண்டை (Green Ladies finger)
ஆதலால் நாட்டுரக விதைகளைச் சேகரித்து பரவலாக்கம் செய்ய முடிவெடுத்த நான், முதலில் பச்சை நீள வெண்டை ரகச் சேகரிப்பைத் துவங்கினேன். ஒரு விவசாயியின் மூலம் அடுத்த விவசாயியோட தொடர்பு கிடைத்தது. அவர்களுடைய சேமிப்பில் இருந்த விதைகளை வாங்கிச் சேகரித்தேன்.

78 ரக விதைகள் (Seeds of 78 varieties)
பல கிளை வெண்டை பச்சை வெண்டை, பச்சைக் குட்டைவெண்டை, பச்சை நீளம். சிவப்பு பல கிளை, வெள்ளை பல கிளை, சிவப்பு கஸ்தூரி வெண்டை காபி வெண்டை, மலை வெண்டை, மாட்டுக்கொம்பு வெண்டை ஆனைத் தந்த வெண்டை என பதினான்கு வகை வெண்டை விதைகளை சேகரித்துள்ளேன். தொடர்ந்து கத்தரி, தக்காளி, அவரை, பீர்க்கங்காய், பாகல், பூசணி, சுரை, மொச்சை, முருங்கை என்று, காய்கறிகள், கீரைகள், சிறுதானியத்தில் பாரம்பரிய சோளரகங்கள் என மொத்தம் 78 ரக விதைகளை மீட்டிருக்கிறேன்.

விதை சேகரிப்புக்காகத் தமிழகத்தின் பல மாவட்டங்களைத் தாண்டி மக்காச்சோள விதைக்காக புனே, சுரை விதைக்காக ஆந்திரா, பீர்க்கு விதைக்காக கர்நாடகா, பூசணி விதைக்காக கேரளா, என பயணம் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

15,000 விவசாயிகளுக்கு (For 15,000 farmers)
ஆறு வருடத்தில் இது வரைக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு விதைகளை அனுப்பியுள்ள சரவணகுமார், வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டுமல்லாமல் மாணவர் விடுதிகள் ஆசிரமங்கள் போன்றவற்றிற்கும் காய்கறி கீரை விதைகளை அனுப்பி வைத்துள்ளார் இவர்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories