பழைய விலைக்கே டி.ஏ.பி. உரத்தை விவசாயிகள் பெறலாம்!

பழைய விலைகளுக்கே டி.ஏ.பி. உரத்தை விவசாயிகள் பெறலாம் என்று மத்தய அரசு தெரிவித்துள்ளது.

உயர்மட்ட குழு கூட்டம்
உர விலைகள் குறித்த உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில் உர விலைகள் குறித்த விரிவான விளக்கம் அவருக்கு அளிக்கப்பட்டது என்றார்.

பாஸ்பொரிக் அமிலம், அம்மோனியா உள்ளிட்டவற்றின் விலைகள் சர்வதேச அளவில் அதிகரித்து வருவதால் உர விலைகள் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. சர்வதேச விலையேற்றத்திற்கு இடையிலும் பழைய விலைகளுக்கே உரங்களை விவசாயிகள் பெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

டிஏபி உரத்திற்கான மானியம் உயர்வு
ஒரு மூட்டை டிஏபி உரத்திற்கான மானியத்தை ரூ 500-ல் இருந்து ரூ 1200 ஆக உயர்த்துவது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இது 140% கூடுதலாகும். இதன் மூலம், சர்வதேச சந்தைகளில் விலையேற்றத்திற்கு இடையிலும், டிஏபி தொடர்ந்து ரூ 1200-க்கே விற்கப்படும், விலையேற்றத்தின் அனைத்து சுமையையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். ஒரு மூட்டைக்கான மானியம் இந்தளவுக்கு இதுவரை உயர்த்தப்பட்டதில்லை என்றார்.

கடந்த வருடம், ஒரு மூட்டை டிஏபியின் விலை ரூ 1,700 ஆக இருந்தது. அதில் ரூ 500-ஐ மத்திய அரசு மானியமாக வழங்கியது. இதன் காரணமாக ஒரு மூட்டை உரத்தை ரூ 1200-க்கு நிறுவனங்களால் விற்க முடிந்தது.

பழைய விலைக்கே டி.ஏ.பி. உரம்
சமீப காலத்தில், டிஏபியில் பயன்படுத்தப்படும் பாஸ்பொரிக் அமிலம் மற்றும் அம்மோனியா உள்ளிட்டவற்றின் விலை சர்வதேச சந்தைகளில் 60 முதல் 70 சதவீதம் வரை உயர்ந்தது. இதன் காரணமாக ஒரு மூட்டை டிஏபியின் விலை ரூ 2400 ஆக இருக்கும் நிலையில், ரூ 500 மானியம் போக ரூ 1900-க்கு உர நிறுவனங்களால் விற்க முடிந்திருக்கும். ஆனால், இன்றைய முடிவின் காரணமாக, ஒரு மூட்டை டிஏபி ரூ 1200-க்கு விவசாயிகளுக்கு தொடர்ந்து கிடைக்கும்.

விவசாயிகளின் நலன் மீது அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், விலையேற்றத்தின் சுமை விவசாயிகள் மீது திணிக்காத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்றும் பிரதமர் கூறினார் எனவே,

14,775 கோடி கூடுதல் செலவு
ஒவ்வொரு வருடமும் ரசாயன உரங்களின் மானியங்களுக்காக ரூ 80,000 கோடியை அரசு செலவிடுகிறது. டிஏபி மானியம் உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக, கரிப் பருவத்தில் கூடுதலாக ரூ 14,775 கோடியை இந்திய அரசு செலவிடும் என்றும் தெரிவித்தார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories