விவசாயிகளுக்கு காய்கறிக் கன்றுகள் இலவசம்!

தக்காளி, கத்திரி உள்ளிட்ட காய்கறிக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படுவதால், விவசாயிகள் பயன்பெறுமாறு தோட்டக்கலைத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீரிய ரக உற்பத்தி (Active type production)
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் என்ற ஊரில் அமைந்துள்ள காய்கறி மகத்துவ மையம் என்ற அரசு நிறுவனத்தின் சார்பில் உயர்ரக தொழில் நுட்பத்துடன் தக்காளி ,மிளகாய், கத்தரி மற்றும் காலிபிளவர் போன்ற பயிர்களை குழித்தட்டு முறையில் வளர்க்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் (All over Tamil Nadu)
இந்த முறைப்படி வளர்க்கப்படும் கன்றுகள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பாகத் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இந்த கன்றுகள் வழங்கப்படுகின்றன இதில்

முன்பதிவு அவசியம் (Booking is required)
விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்திற்கு முழுமையாக நட தேவையான கன்றுகளை இல்வசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.எனவே தற்போது கிடைக்கும் இந்த வீரிய ரக ஓட்டு வகைக் கன்றுகளைப் பெற விவசாயிகள், தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் எனவே

அனுமதிச்சீட்டு (Ticket)
இதற்கு விவசாயிகள், தங்கள் அருகாமையிலுள்ள ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு உதவி தோட்டக்கலை இயக்குனர் இடம் விண்ணப்பம் கொடுத்து அனுமதி சீட்டுக் கொள்ளலாம் என்றார்.

பிற மாவட்ட விவசாயிகள் (Other district farmers)
இந்த அனுமதிச்சீட்டின் உதவியுடன் இலவசக் கன்றுகளைப் பெற்றுப் பயனடையலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றிய அனைத்து பகுதி மாவட்டங்களும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும்

ஆண்டு முழுவதும் (Throughout the year)
பொதுவாகப் போக்குவரத்து செலவு பிரச்சனை இல்லை எனும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இதனை பெற்றுக் கொள்ளலாம்.வருடம் முழுவதும் இந்த வகை நாற்றுகள் கிடைக்கும் என்று கூறினார்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories