அதிக மகசூல் பெற விதை பரிசோதனை மிக மிக முக்கியமான ஒன்று!

விவசாயிகள் அதிக மகசூல் பெறுவதற்கு விதைப் பரிசோதனை (Seed Testing) செய்து கொள்வது மிக மிக அவசியம் (Essential) என வேளாண்துறையினர் (Agriculture Department) அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து விதைப் பரிசோதனை அலுவலர் ஜா.ரெனால்டா ரமணி வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களில் மிக மிக முக்கியமானவைகளில் ஒன்று நல்லவிதை (Quality Seed).

நல்ல விதை என்பது அதிக முளைப்புத் திறன், அதிக சுத்தம், குறைந்த ஈரத்தன்மை மற்றும் கலவன் இல்லாமல் இருத்தல் அவசியம்.

வேளாண்மை துறையினரால் ஒவ்வொரு பயிருக்கும் சாகுபடி பரப்பில் தகுந்தவாறு சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் 3 வகையான மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்படுகின்றன.

எனவே விதைச் சான்றளிப்பு பிரிவில் பதிவு செய்து, விதைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் விதைச்சான்று உதவி இயக்குநர் மூலம் வரவழைக்கப்படுகிறது

அதேநேரத்தில் அரசு, தனியார் விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகள், விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்து மாதிரி எடுக்கப்பட்டு நேரடியாக வரவழைக்கப்படுகிறது எனவே,

விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் நோடியாக பரிசோதனைக்கு அனுப்பும் போது இணையதளம் மூலம் பதிவு செய்த பின்னர் ஒருவிதை மாதிரிக்கும் ரூ.30 கட்டணம் செலுத்தி, விதையில் தரத்தை அறிந்து பயிர் செய்வது நல்ல பலன் தரும் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories