தினமும் சொட்டுநீர் பாசன முறையில் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நீர்ப்பாசனத்தில் ஜீவாமிர்தக் கரைசலையும், பஞ்சகாவியம் கலந்து விடுங்கள்.
அதன் பிறகு நடவு செய்த 30-வது 60-வது நாளில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும்.
மேலும் பஞ்சகாவ்யா கரைசல் தெளித்து விடலாம். அமிர்த கரைசலை தெளித்து விட்டால் நல்ல திரட்சியான காய்களை பெறலாம்.
பூக்கள் பிடித்தலை அதிகரிக்க தேமோர் கரைசல் பூ பூக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும்.
பூக்கள் கொட்டாமல் இருக்க தேங்காய் பால் கடலை புண்ணாக்கு கொடுத்து வரலாம்.
அறுவடை, மகசூல்
இந்த முறைகளை கையாண்டு விவசாயிகள் 80 முதல் 120 நாள் வரை அறுவடை செய்யலாம் .வீரிய ஒட்டு ரகத்தில் ஹெக்டேருக்கு 40 முதல் 50 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.