காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்தல்

ஆடிப்பட்ட காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டியதின் அவசியத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முருகேசன் விளக்கம் அளித்துள்ளார்.

காய்கறி விதைகளை விதைக்கும் முன்னர் விதைநேர்த்தி செய்வது அவசியம் என்றார் .
குறிப்பாக தக்காளி, கத்தரி, மிளகாய் பயிரிட உள்ளவர்கள் விதை நேர்த்தி செய்வது அவசியமாகும்.
காய்கறி பயிர்களை வேரழுகல்நோய், வாடல் நோய், நாற்றழுகல் நோய், இலைப்புள்ளி நோய் என பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. அவை விதைகள் மூலமாகவும் பரவுகின்றன.
பூசண வித்துக்கள் விதையின் மேல் மற்றும் உட்புறம் தங்கியிருக்கின்றன .எனவே விதை முளைக்கும்போது பூசண வித்துகளும் முளைத்து சாதகமான சூழ்நிலையில் நோயினை உண்டாக்கி சேதம் விளைவிக்கின்றன.
இதனை தடுக்க காய்கறி விதைகளை விதைப்பதற்கு சற்று முன்னர் ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் என்ற உயிரியல் காரணி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதை நேர்த்தி செய்வதால் நாற்றங்காலில் சாதகமான சூழ்நிலைகளில் தாக்கும் நாற்றழுகல் நோயினை தடுக்க இயலும்.
சூடோமோனாஸ் ஃபுளு ரசன்ஸ் என்ற உயிரியல் பூசணக்கொல்லி ஒரு கிலோ விலை ரூபாய் எழுப்பத்தைந்து
ஆடிப்பட்ட காய்கறி சாகுபடியாளர்கள் சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் உயிரியல் பூசணக்கொல்லியை பயன் படுத்துமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்

இது ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் விற்பனைக்குத் தயாராக உள்ளது. நீங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்தில் இருந்தால், இந்த முகவரியில் தொடர்பு கொண்டு பூசண கொல்லியை பெற்று கொள்ளலாம்

தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர் 626 125
தொலைபேசி: 04563260736

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories