தரமான நெல் விதை உற்பத்திக்கான சூட்சமம் பற்றி தகவல்கள்!

தரமான விதைகளே அதிக மகசூலுக்கு ஆதாரம். எனவே இதனைக் கருத்தில்கொண்டு விவசாயிகள், வரிசை நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி முறையினை பின்பற்றி நடவு செய்ய வேண்டும்.

செம்மை நெல் சாகுபடி
தரமான விதைகளைக் கொண்டு, செம்மை நெல் சாகுபடி செய்தால், அதிக மகசூல் ஈட்டி விவசாயிகள் லாபம் பெறலாம். எனவே செம்மை நெல் சாகுபடிமுறை பற்றிப் பார்ப்போம்.

தூர் கட்டும் பருவத்திற்கு முன் நீரினை வடிக்க வேண்டும். தூர் கட்டும் பருவம் முதல் முறையாக நீர் பராமரிக்க வேண்டும்.பூக்கும் மற்றும் பிடிக்கும் சமயத்தில் நீர் தட்டுப்பாடு கண்டிப்பாக இருந்தால், களைகளைக் கையினாலோ அல்லாது கோனோவீடர் கருவியைப் பயன்படுத்தியோ நட்ட 30-35 நாட்களுக்குள் எடுப்பது அவசியம் மண் பரிசோதனைப்படி உரமிடுதல் வேண்டும் அல்லது பொது. பரிந்துரைப்படி தூர் கட்டும் ,பூக்கும் பருவம் மற்றும் பால்பிடிக்கும் சமயத்தில் பிரிந்து இடுதல் வேண்டும் எனவே

கலவன் அகற்றுதல்
கலவன் அகற்றுதல் பணி விதை உற்பத்தியின்போது மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டிய பணி.

பூக்கும் முன்
அதிக உயரம் மற்றும் மிகவும் குட்டையான செடிகளை நீக்குதல் அவசியமான ஒன்று.

பூக்கும் தருணம்
முன்னதாக பூக்கும் செடிகள், காலதாமதமாகப் பூக்கும் செடிகள். மீசை நெல் மற்றும் சிகப்பு பொட்டு நெல் ஆகிய செடிகளை நீக்குதல் மிக மிக முக்கியம் இதில்

அறுவடைக்கு முன்பு
விதைப்பயிர் மணியின் பருமனுக்கு ஏற்ப, அதைவிட பருமனாகவோ அல்லது சன்ன மாகவோ உள்ளவற்றை நீக்கிவிட வேண்டும் மற்றும்

குறிப்பிட்ட நெல் இரகத்தின் குணாதிசயங்களில் இருந்து தெரிகிற எல்லா தூர்களையும்,களை செடிகளையும் மற்றும் நோய் வாய்ப்பட்ட பயிர்களையும் நீக்க வேண்டும்.

கலவன் செடிகளை வேரோடு களைந்தெறிய வேண்டும். பூக்கும் போது தொடர்ந்து 2 முதல் 3 முறை அதிகாலையில் கலவன்களை அகற்றும் பணியினை மேற்கொண்டால் கலவன்களை எளிதில் கண்டறிய முடியும்.

அறுவடை (Harvest)
90 சதவீத விதைகள் பொன்னிறமாக மாறிய பிறகு அறுவடை செய்வது சிறந்தது. அறுவடையின் போது, மணிகளின் ஈரப்பதம் 15 முதல் 20 சதத்திற்குள் இருக்க வேண்டியது அவசியம்.
அறுவடை முடிந்த உடன் விதைகளை உடனடியாக உலர்த்துதல் அதைவிட முக்கியம். உலர்த்தும் போது களத்தில் வேறு நெல் விதைகள் இருக்கக் கூடாது.

காலை 8-12 மணி வரையிலும், மாலை 3-5 மணி வரையிலும் வெய்யிலில் உலர்த்த வேண்டும். உலர்த்தும் போது அடிக்கடி கிளறி விட வேண்டும். விதை நெல்லை 13 சதவீத ஈரப்பதத்திற்கு கீழ் உலர்த்தி, பதர்கள் மற்றும் பயிரின் பாகங்களை நீக்கி சுத்தம் செய்து, புதிய சாக்குகளில் நிரப்பி சுத்தி நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றார்.

எனவே, விதை நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள், தரமான விதை நெல் உற்பத்தி செய்திட மேற்கூறிய தொழில் நுட்பங்களைத் தவறாமல் கடைப்பிடித்து விதை நெல் உற்பத்தி செய்யலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories