விதையின் ஆரோக்கியம்தான் விவசாயத்திற்கு அடிப்படை. ஒரு சிறு விதையே விருச்சம் ஆகிறது. அத்தகைய விதைகளை தரமாகப் பராமரித்தால் தான் விவசாயத்தை பாதுகாக்க முடியும். விதைகளை சேமித்து பாதுகாக்க இங்கு உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
தானியம் மற்றும் விதைகளை தாக்கும் பூச்சிகள் பெரும்பாலும் வண்டுகள் மற்றும் புழுக்கள் இனத்தைச் சேர்ந்தவை தான்.
விதைகளை சேமிக்கும் பொழுது புதிய கோணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் .சேமித்து வைக்கும் அறைகளையும் விதை கிடங்குகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் .உடைந்த தானியங்கள், குப்பைகள், தூசு போன்றவற்றை அகற்றி விட வேண்டும்.
தானியங்கள் மற்றும் விதைகளை சேமிக்கும் அறைகளை வேப்பம் புண்ணாக்கு மற்றும் வேப்ப எண்ணெய் கரைசல் ஆகியவற்றைக் கொண்டு முழுக வேண்டும் .சேமிக்கும் விதைகளின் ஈரப்பதம் 8 சதவீதத்திற்கும் குறைவாகவும் சேமிக்கும் தானியங்களின் ஈரப்பதம் 14 சதவீதத்திற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.
சேமிக்கும் மூங்கில் கூடைகள் மீது வேப்பம் புண்ணாக்கு கரைசலை ஊற்றி கெட்டியாக பசைபோல் தயாரித்து பூசவேண்டும்.
காய்கறி விதைகளை பசுஜனத்தில் தோய்த்து பிறகு உலர வைத்து சேமிக்க வேண்டும் .மேலும் காய்கறி விதைகளை சேமிக்க துணி பைகளை தான் பயன்படுத்த வேண்டும். ஈரப்பதம் 7 முதல் 8 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது.
இவ்வாறு பராமரிப்பதன் மூலம் நல்ல ஆரோக்கியமான விதைகளை உருவாக்க முடியும்.