விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை

விதைக்கும் போது விதைகளின் மிக மிக அருகில் வைக்கக்கூடாது. மேலும் ஆழமாக விதைக்க கூடாது, விதை மண்ணில் மூடி இருந்தால் போதும் .விதைத்த பிறகு நீர் அதிகமாக ஊற்றக்கூடாது. விதை மக் கி தான் முளைக்கும் அதிகம் ஈரம் இருந்தாலும் முளைக்காது.

கீரை விதையை தூவி விட்டு மண்ணை கிளறி விடவேண்டும் .பிறகு மெதுவாக மண்ணை அழுத்தி விட வேண்டும். இதன் மூலம் விதையும் மண்ணும் மற்றும் முளைக்கும் திறன் நன்றாக இருக்கும் .மண்ணில் கீரை விதையை விதைத்த பிறகு நீரை தெளித்து விட வேண்டும். தொட்டியாக இருந்தால் அதன் ஓரத்தில் நீரை ஊற்ற வேண்டும். நிழலில் வைக்கக்கூடாது .நாட்டு விதைகள் மண்ணில் வளர்வதை விட தொட்டியில் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும். தக்காளி, கத்தரி, மிளகாய் விதைகளை கண்டிப்பாக நாற்று விட்டு தான் பிறகு எடுத்து நடவு செய்ய வேண்டும். கீரை விதை விதைக்கும் முறையில் இதனை விதைக்கவேண்டும். விதைகளை நாட்டு மாட்டு கோமியத்தில் ஊறவைத்து பிறகு அதை காயவைத்து சுரைக் குடுவையில் வைத்து எத்தனை வருடம் வேண்டுமானாலும் சேமிக்கலாம் .மண்ணில் மாட்டுச் சாணியை கலந்த பிறகு விதைத்தால் விரைவாக முளைக்கும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories