விதை சான்றளிப்பின் போது வி தை தூய்மை, விதை அ ல்லாத கலப்பு, களை விதைகள், முளைப்புத்திறன், காற்று புகும் சேமிப்புக் கலனின் ஈரப்பதம் மற்றும் காற்று புகா காலனின் ஈரப்பதம் ஆகிய காரணிகளை வைத்து விதையின் தரமானது நிர்ணயிக்கப்படுகிறது.
பாசன நீரில் திரவ உரை கரைசலை கலந்து விடுவதால் என்ன நன்மை?
உரத்தின் செயல்திறனை அதிகரிக்கும். சத்துக்களின் இருப்பை அதிகரிக்கும்.
பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை குறைக்காமல் 20 முதல் 40 சதவீத உர பயன்பாட்டை குறைக்கும்.
வேலையாட்கள் செலவை சேமிக்கும். சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும்.
சத்துக்கள் வெளியேறுதலை குறைத்து 20 முதல் 25 சதவீதம் தண்ணீரை சேமிக்கும்.
பீர்க்கங்காய் சாகுபடி நாற்று உற்பத்தி செய்து எப்படி நடவு செய்யலாம்?
நிழல் வலை குடில்களில் குழித்தட்டு மூலம் நாற்றுகளை வளர்க்கலாம் .மண்ணிற்கு பதிலாக நன்கு மக்கிய கோகோ கறியை பயன்படுத்தி விதைக்கலாம்.
குழி தட்டில் உள்ள செல் ஒன்றிற்கு ஒரு விதை விதைத்து தினமும் இரண்டு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும். பிறகு 12 முதல் 15 நாள் வயதுடைய நாற்றுகளை ஒன்றிற்கு ஒரு செடியை நீர் பாய் த்து நடவு செய்ய வேண்டும்.
வாழை சாகுபடியில் ஜீவாமிர்தம் ,பஞ்சகாவியம் போன்ற உரங்களை எப்பொழுது கொடுக்க வேண்டும்?
வாழையை நடவு செய்ததிலிருந்து அறுவடை செய்யும் வரையில் ஜீவாமிர்தம் அளிக்கலாம் .நடவு செய்த இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் மற்றும் பஞ்சகவ்யத்தை மாற்று முறையில் அளிக்கலாம்.
அம்மைநோய் பசுமாடுகளை தாக்காமல் இருக்க எந்த மாதிரியான முன் எச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்?
மாடுகளுக்கு மொ ந்தன் வாழைப்பழத்தைஉரித்து பன்றி நெய் யில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு ஒரு பழம் கொடுக்கலாம். மேலும் பூசணிக்காயில் ஒரு ரூபாய் அளவு துளையிட்டு குடிநீர் தொட்டியில் போட்டு விடலாம்( நீரின் அளவு அரை தொட்டி தான் இருக்க வேண்டும்)