நல்ல தரமான விதைகளே நல்ல விளைச்சல் பெறுவதற்கு ஆதாரமாக விளங்குகிறது. தரமான விதை என்பது சான்றளிக்கப்பட்ட விதைகள் ஆகும் .விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் விதை உற்பத்தி செய்ய சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதன் மூலம் அதிக விளைச்சல் பெறலாம்.
சான்று விதை என்பது குறிப்பிட்ட தர நிர்ணயத்தை புறத்தூய்மை, முளைப்புத்திறன் ,ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு ஆகியவற்றை கொண்டதாகும்.
புறத்தூய்மை பரிசோதனைகளில் தூய விதைகள் பிற தானிய விதைகள் உயிரற்ற பொருள்கள் விதைகள் என நான்கு இடங்களில் பரிசோதிக்கப் படுகின்றன.
விதைக்கப்படும் விதைகள் பிற தானிய விதைகள் ,உயிரற்ற பொருள் மற்றும் கலை விதை ஆகியவற்றை தர நிர்ணயிக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் விதை தூய்மையானதாகவும் விளைச்சலுக்கு ஏற்றதாகவும் இருக்கும்.
நல்ல விதைகளுடன் பிற பயிர்களின் விதைகள் அதிகமாக கலந்திருந்தாலும் பயிரின் விளைச்சலுக்கான இடப்படும் உரம் மற்றும் பூச்சி மருந்துகளை விளைச்சலுக்கு தேவையில்லாத செடிகளும் எடுத்துக்கொள்கிறது. இதனால் இடுபொருட்கள் வீணாவதுடன் எண்ணிக்கையும் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
விதைகளுடன் கலந்திருக்கும் கல் ,மண் மற்றும் பயிரின் நீர் வர பகுதிகளான வேர், தண்டு, இலை போன்றவற்றையும் இதனால் அவையில் பாதிக்கக் கூடியதாகும். வேறு விதைகளுடன் வேர் தண்டு சேர்ந்திருப்பதால் பூச்சி மற்றும் புழுக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
மேலும் விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக இருந்தால் பூச்சிகள் மற்றும் பூஞ்சான் தாக்குதல் அதிகம் ஏற்படும்.
இந்த பிரச்சனையிலிருந்து விடுபட புறத்தூய்மை பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகள் ஆன முளைப்புத்திறன் ஈரப்பதம் ஆகியவற்றை அந்தந்த மாவட்ட பகுதியில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து குறைந்த விலையில் ஆய்வு செய்து கொள்ளலாம்.
விதை பரிசோதனை செய்வதற்கு விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் விதை குழியில் இருந்து விதை மாத்திரைகளை பாலித்தீன் பை அல்லது துணிப்பையில் 200 கிராம் அளவிற்கு சேகரித்துக் கொள்ள வேண்டும். பிறகு பரிசோதனைக்கு அனுப்பும் பயிர் ,ரகம் ,குவியல், எண் ஆகிய விவரங்களை விவரச் சீட்டு மற்றும் முகப்பு கடிதத்துடன் நேரில் அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும். இவற்றுடன் ஒரு விதை மாதிரிக்கு ஒரு ரூபாய் 30 செலுத்த வேண்டும்.
எனவே விதைகளை பரிசோதனை செய்து அதன் தரத்தை தெரிந்துகொண்டு விதைப்பதால் அதிக விளைச்சல் பெற்று நல்ல லாபம் பெற முடியும்.