விதை உற்பத்தியில் பிற ரக கலப்பினை தவிர்க்க மிகச் சிறந்த வழி!

தரமான விதை உற்பத்தியில் கலப்பு பயிர்களை உரிய நேரத்தில் தகுந்த முறையில் நீக்கினால் மட்டுமே விதையின் தரத்தை வயலில் பேணிக்காக்க முடியும். எனவே கலப்பு பயிர்களை வயலில் நீக்குவது மிக முக்கியமான ஒன்றாகும்.

விதைப் பண்ணை அமைக்க விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையங்களில் இருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.

விவசாயிகள் அதிக அளவில் விதைகளை வாங்கும் போது அனைத்து முட்டைகளும் ஒரே ரகமாக உள்ளனவா? என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரகங்கள் வாங்கும் பொழுது அவற்றை தனித் தனியே வைத்து பயன்படுத்த வேண்டும்.

மிக முக்கியமாக நாற்று விடுவதற்கு தயார் செய்யும்போது ரகங்கள் கலந்து விடாமல் இருக்க வெவ்வேறு தேதிகளில் மற்றும் இடங்களில் , நாற்றுவிட்டு வெவ்வேறு தினங்களில் நாற்று பிரித்து நட வேண்டும். நடவு முடிந்து மீதமுள்ள நாற்றுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் விதைச்சான்று அலுவலர்கள் வயல் ஆய்வின்போது கலவன்கள் இருப்பது குறித்து தெரிவிக்கும் பட்சத்தில் கலவன்களின் அடையாளங்களை விதைச்சான்று அலுவலர்களிடம் தெரிந்துகொண்டு கலவன் நீக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரகங்கள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்த அடையாளங்களை காண்பித்து அதில் கலப்பு பயிர்கள் நீக்குவது பற்றி புரியும்படி எடுத்துக் கூறுவது அவசியம்.

காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும் மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் மட்டுமே கலவன் நீக்கம்பணியினை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அகற்றப்பட்ட கலப்பு பயிர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நன்கு முற்றிய பயிரை ரகம் வாரியாக தனித்தனியே அறுவடை செய்து அடித்து காய வைக்க வேண்டும்.

முக்கியமாக கதிரடிக்கும் மற்றும் உலர வைக்கும் இடத்தை முழுமையாக நன்கு சுத்தம் செய்து அதன் பின்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நன்கு காய வைத்த விதைகளை புதிய சாக்கு கைகளில் மட்டுமே சேமித்து மூட்டைகளின் மேல் ராகத்தின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இது போன்ற வழிமுறைகளை பின்பற்றினால் விதை உற்பத்தியில் கலப்பினை தவிர்த்து நல்ல விதைகளை உற்பத்தி செய்யலாம்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories