விதை சுத்திகரிப்பு நிலைய உரிமம் பெறும் வழிமுறைகள் ( பகுதி 2)

விதை சுத்தி நிலையத்தில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்:

விதை சுத்தி நிலையத்தில் இருப்பு பதிவேடு

விதை சுத்திகரிப்பு மற்றும் சான்று அட்டை பொருத்தும் பதிவேடு

சான்று அட்டை இருப்பு மற்றும் உபயோகப் பதிவேடு

நெல்லில் பதர் கணக்கிடும் பதிவேடு

அறிவுரை பதிவேடு

சான்று அட்டைக்கான 5 இனங்கள்:

சுத்திகரிப்பு மற்றும் சான்று அட்டை பொறுத்தல்

சான்று அட்டை பொருத்தம்

பருத்தி அரவை பணிக்கு
பருத்தி அரவை மற்றும் சான்று அட்டை பொருத்தம்

பருத்தி அரவை சுத்திகரிப்பு மற்றும் சான்று அட்டை பொருத்தம்

மேற்கண்ட அனைத்தையும் முறையாக பின்பற்றி அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் இதில் குறிப்பிட்டுள்ள ஐந்து இன ங்களில் எந்த இன த்திற்கு வேண்டுமானாலும் விதை சுற்றி நிறைய உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.

உரிய விண்ணப்ப படிவத்தில் இரண்டு நகல்களில் அந்தந்த பகுதிக்குரிய விதைச்சான்று அலுவலர் பரிந்துரையுடன் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் விதை சுத்தி நிலைய கட்டிட வரி ரசீது அல்லது வாடகை ஒப்பந்த பத்திரம் கட்டிட வரைபடம் எந்திரங்கள் வாங்கியதற்கான ரசீது மற்றும் எண்கள் மேடை அரசும் முத்திரையிடப்பட்ட அதன் ரசீது ஆகிய விவரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

புதிய விதை நிலைய உரிமம் பெற கட்டணம் ரூபாய் 2000 செலுத்தவேண்டும்.
அங்கீகாரம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூபாய் 1000 செலுத்தி அங்கீகாரத்தினை புதுப்பித்துக் கொள்ளலாம்

சுத்தி நிலையம் அங்கீகாரம் காலாவதியான நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் 250 தாமதக் கட்டணம் செலுத்தி புதுப்பிக்கலாம்.

ஒரு மாதம் கடந்த நிலையில் ரூபாய் 2000 செலுத்தி புதிய உரிமத்துக்கு தான்விண்ணப்பிக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories