விதை நேர்த்தி என்றால் என்ன?

விதை நேர்த்தி

விதை நேர்த்தி என்பது விதைகளை விதைக்கும் முன்பு விதைகளை பக்குவப்படுத்தும் ஒரு முறையாகும். இதனை மூன்று வழிகளில் செய்யலாம்.

விதை மேல் பூசுதல்

விதைமேல் உறை இடுதல்

விதை மூலம் பூசுதல்

இம்முறை பொதுவாக செய்யப்படும் ஒரு விதை நேர்த்தி முறையாகும் .இந்த முறையில் விதையானது உலர்ந்த வகை பொருட்களை கொண்டு அல்லது கஞ்சி போன்ற பொருட்களில் நானோ அல்லது திரவ பொருட்களை கொண்டு முலாம் பூசப்படுகிறது.

விதை முறையிடுதல்

இம்முறையில் ஒரு சிறந்த ஒட்டும் பொருட்களைக்கொண்டு விதைநேர்த்தி செய்யவேண்டிய விதையின் மேல் ஒட்டப்படுகிறது.

விதை மூலம் பூசுதல்

இம்முறையானது விதைநேர்த்தி முறைகளை மிகச்சிறந்த உயரிய முறையாகும். இதன் மூலம் விதையின் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு விதையானது முலாம் பூசப்பட்டு அதை பயன்படுத்துவது எளிதாகிறது.

இத்தகைய விதை நேர்த்தி முறைகள் தனித்துவம் வாய்ந்த இயந்திரங்கள் செயல்முறை மற்றும் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இதற்குஎதிர்ப்பு செலவு அதிகமாகும்.

விதை நேர்த்தி இன் பயன்கள்

விதை நேர்த்தி செய்து விதைத்தால் அதன் முளைக்கும் தன்மையானது சீராக இருக்கும்.

விதையானது குறித்த காலத்திற்கு முன்பு சீரான நிலை மற்றும் வேக வளர்ச்சியை அடைய உதவுகின்றது.

பயறு வகைகளில் வேர் முடிச்சுகள் உண்டாவதை அதிகப்படுத்துகிறது.

விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய் கிருமிகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து விதை மற்றும் நாற்றுகளை பாதுகாக்கிறது.

குறைந்த அல்லது அதிக ஈரத்தன்மை போன்ற எதிர்மறையான சூழ்நிலைகளிலும் சீரான பயிர் வளர்ச்சியை தருகிறது.

மண் மற்றும் இலை வழிகளில் செலுத்துவதை விட விதைநேர்த்தி செய்வது சிறந்தது .

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories