விவசாயிகளே! விதை ஈரப்பதத்தின் முக்கியத்துவத்தை அவசியம் தெரிந்து கொள்ளுதல்!

விதை ஈரப்பதம் (Seed moisture) என்பது விதையானது ஈர்த்து வைத்துள்ள தண்ணீரின் அளவு ஆகும். விதையின் ஈரப்பதம் சவீதத்தில் குறிப்பிடப்படுகிறது. பயிரிடுதலில் விதை ஈரப்பதம் முக்கிய பங்கு வகிக்கிறது.

விதையின் ஈரப்பதம்
விதையின் ஈரப்பதம் ஒரு விதையின் முளைப்புத்திறன், விதைக்கெடுதல், பூச்சி தாக்குதல் மற்றும் அதிகபட்ச சேமிப்பு காலம் (Maximum storage period) ஆகியவற்றை நிர்ணயம் செய்கிறது. விதையின் ஈரப்பதம் மிகக்குறைவான நிலையில் இருந்தாலும், மிக அதிகம் இருந்தாலும் விதையின் முளைப்புத்திறன், சேமிப்பு கால அளவு, பூஞ்சானம் மற்றும் பூச்சி தாக்குதல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, விதையின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில் சேமித்து வைக்க வேண்டும். விதையின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது விதைத்தரத்தை (Seed quality) முடிவு செய்யும் முக்கிய காரணியான, விதை முளைப்புத்திறன் குறையும்.

அதிகபட்ச ஈரப்பத சதவீத அளவு:
ஒவ்வொரு பயிரின் விதை ஈரப்பதமும் அப்பயிருக்கு ஏற்றவாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெல் (Paddy) 13 சதவீதம், சிறுதானியங்கள் (Cereals) 12%, பயறு வகைகள் (Legumes) 9%, நிலக்கடலை, சூரியகாந்தி, எள் தலா 9%, பருத்தி (Cotton) 10% என விதை பயன்பாட்டிற்கான அதிகபட்ச ஈரப்பத சதவீதம் (Maximum moisture percentage) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆவணி, புரட்டாசி பட்டங்களில் விதைப்பு செய்யப்பட்ட சோளம், கம்பு, பாசி, உளுந்து போன்ற பயிர்களின் அறுவடை (Harvest) நடக்கவுள்ளது. எனவே, விவசாயிகள் விதையினை நன்கு உலர்த்தி விதையின் ஈரப்பதத்தை மேற்குறிப்பிட்ட அளவிற்குள் சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்றார்.

விதையின் ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறனை அறிந்து கொள்ள மாவட்ட விதை பரிசோதனை அலுவலகங்களை (District Seed Testing Offices) தொடர்பு கொண்டு விவசாயிகள் பயனடையலாம் என்று கூறினார்.

பா.சாய்லெட்சுமி சரண்யா வேளாண் அலுவலர்
99528 88963

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories