வேளாண்மை செய்திகள்!

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நடப்பு குறுவை பருவத்தில் குறுவை நெல் சாகுபடி பரப்பில் அதிகப்படுத்தி விடவும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு அரிசி உற்பத்தி திறனை அதிகப்படுத்தவும் டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முதலமைச்சரால் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது இத்திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் பசுந்தாள் உரங்களான தக்கைப்பூண்டு போன்ற வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு ஏக்கருக்கு இரண்டு மூட்டை யூரியா ஒரு மூட்டை டிஏபி மற்றும் 25 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பட்டா சிட்டா நடப்பு பசலையில் குறுவை நெல் சாகுபடி செய்தமைக்கான அடங்கல் சான்றிதழ் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் விவசாயிகளுக்கு குறுவை நெல் சாகுபடி தொடர்பான விபரங்களை வழங்கும் பொருட்டு அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் குருவை தொட்டு திட்ட உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது மேலும் தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04362 267 679 தொடர்புகொண்டு விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான குறுகிய கால விதை நெல் ரகங்களை ஏடிடீ 36 37 ஆடுதுறை 43 ஆடுதுறை 45 db75en sp16 மற்றும் co51 ஆகிய ரகங்கள் 105 தன் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் 285 டன் விதை நெல் தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது குறுவை சாகுபடிக்கு தேவையான மின்சக்தி ஆருடன் விவரங்கள் திரவ உயிர் உரங்கள் 160 லிட்டர் ஆகியவை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது குறுவை சாகுபடிக்கு 2460 டன் யூரியா 793 டிஏபி ஆர்வத்துடன் பொட்டாஷ் ஆகிய உரங்களை அனைத்து தனியார் சில்லரை விற்பனை நிலையங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவே விவசாயிகள் தேவையான இடுபொருட்களை குறித்த காலத்தில் பெற்று சாகுபடி மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories