விதைகளில் இந்தியவிதை சட்டப்படி பரிந்துரைத்த ஈரப்பதம் இருக்க வேண்டும். உதாரணமாக நெல்லுக்கு 13 சதவீதம் சோளம், கம்பு, கேழ்வரகு ,மக்காச் சோளம் 12 சதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். உளுந்து பாசிப்பயறு, துவரை, தட்டைப்பயறு, நிலக்கடலை, பட்டாணி ,சூரியகாந்தி 9% பருத்தி ,வெண்டைக்காய் 10% வெங்காயம், கத்தரி, மிளகாய் ,தக்காளி ,கீரை ,ஆமணக்கு ,கேரட்டிற்கு 8% புடலை, சுரை, வெள்ளரி ,முட்டைகோஸ் ,காலிபிளவர் 7% ஈரப்பதம் இருக்க வேண்டும். இதைவிட அதிகம் இருந்தால் மண்ணிலுள்ள பூஞ்சாணங்கள் தாக்கி விதைகள் அழுகிவிடும். அவற்றின் முளைப்பு திறன் குறைந்து பயிர் எண்ணிக்கையும் குறைந்துவிடும் .இதை தவிர்க்க விதை மாதிரிகள் 50 கிராம் அளவு காற்றுப்புகாத பைகளில் சேகரித்து திண்டுக்கல் கிழக்கு தாலுகா அருகிலுள்ள உழவர் மைய வளாகத்தில் இயங்கும் விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதிக்கலாம் .மாதிரி ஒன்றுக்கு ரூபாய் 30 கட்டணம் செலுத்தி அதை நாளில் முடிவையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
