சூடோமோனாஸ் என்ற பூஞ்சானக் கொல்லியின் பயன்கள்
சூடோமோனாஸ் விதைமூலம் உண்டாகும் நோய்களை கட்டுப்டுத்தும்
பயிர்களில் ஏற்படும் இலைப்புள்ளி நோய் வாடல் நோய் கருகல் நோயை கட்டுப்படுத்தும்
பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மை வாய்ந்த சூடோமோனாஸ் புளோசன்ஸ்
நோய் எதிர்ப்பு திரவங்களை உற்பத்திச் செய்வதுடன், அதிகமாக வேர்கள் தளிர உதவுகிறது.
சக்தி வாய்ந்த வேர் நுண்ணுயிரியை (ரைசோபாக்டீரியம்) கொண்டு உருவாக்கப்பட்டது.
வேரைச் சுற்றி அதிவிரைவில் பெருகி தாவரத்தினுள் ஊடுருவி நோய் காரணிகளின் தாக்குதலிலிருந்து பயிரை பாதுகாக்கிறது.
மண்ணிலுள்ள பாக்டீரியா மற்றும் பூசாண நோய்காரணிகளுக்கு தேவையான இரும்பு சத்தின் அளவை குறைத்து அவை வளர விடாமல் தடுக்கிறது
.
வேர் அழுகல் நோய்களை கட்டுப்படுத்தும்
நெல் பயிரின் குலை நோய் இலைகருகல் நோய்கள் மற்றும் வாழையில் பனாமாவாடல் நோய் இவற்றை கட்டுப்படுத்த சிறந்தது
சில நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் திறன் படைத்தவை
அளவு உபயோகிக்கும் முறை
விதை நேர்த்தி செய்தல்
10-15 கிலோ விதைக்கு 200 கிராம் சூடோமோனாஸ் ஒரு லிட்டர் ஆரிய அரிசி வடிகஞ்சி (அ) 100 கிராம் வெல்லக்கரைசலுடன் கலந்து விதைகளை இதில் இட்டு சீராக நுண்ணுயிரிகள் விதையின் மேல் ஒட்டுமளவிற்கு கலந்து நிழலில் 30 நிமிடம் காயவைத்து பின் விதைக்கவும்.
10-15 கிலோ விதைக்கு 200 கிராம் சூடோமோனாஸ் ஒரு லிட்டர் ஆரிய அரிசி வடிகஞ்சி (அ) 100 கிராம் வெல்லக்கரைசலுடன் கலந்து நாற்றுக்களை நனைத்து நடவு செய்யலாம்
அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 2 கிலோவை 50 கிலோ மக்கிய தொழுவுரத்தில் கலந்து அடியுரமாக போடலாம்.
ஒரு கிலோ சூமோமோனாஸ் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து விடலாம்